புதுடெல்லி: பிரதம வேட்பாளராக அறிவிக்க நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று எல்.கே அத்வானி கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் அரசு பா.ஜ.க வுடனான கூட்டணி முறிவு அறிவிப்பை நாளை நிதிஷ்குமார் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் பாரதீய ஜனதா இல்லாமல் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி முறிவதை பாரதீய ஜனதா தலைவர்கள் விரும்ப வில்லை. இதையடுத்து பாரதீய ஜனதா தலைவர்கள் நிதிஷ்குமாருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அத்வானி நிதிஷ்குமாருடன் தொடர்பு கொண்டு "நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வில்லை" என்பதை எடுத்துக் கூறினார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி
தலைவர்களிடையே உடன்பட்டு இல்லை. மேலும் நரேந்திர மோடிக்கு பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு குறைவு என்பதையும் தெரிவித்தார். மேலும் ஐக்கிய ஜனதா தளத்தை கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய மாட்டோம் என்றும் அத்வானி உறுதி அளித்தார்.
இதற்கிடையே : பீகாரில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.எ க்கள் கூடத்துக்கு துணை முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் மாநில பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷீல் மோடி இல்லத்தில் மலை 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக