திங்கள், ஜூன் 24, 2013

கோத்ரா சம்பவம்:விசாரணை நடத்திய நீதிபதி யு.சி.பானர்ஜியை கொலைச் செய்ய முயன்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் எரிபொருளை முஸ்லிம்கள் வெளியே இருந்து ஊற்றவில்லை,ரெயிலுக்கு உள்ளேயிருந்தே ஊற்றப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்த நீதிபதி யு.சி. பானர்ஜியை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தான் என்று சாட்சி ஒருவர் கூறியதாக 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறுகிறது.


பானர்ஜியை கொலைச் செய்ய திட்டமிட்டிருந்த சுனில் ஜோஷி, கொல்கத்தாவில் அவரது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கண்காணித்து வந்தான். சுனில்ஜோஷியின்திட்டத்தை புரிந்துகொண்டு அவனிடமிருந்து விலகி இருந்ததாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சாட்சி ஒருவர் என்.ஐ.ஏவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மாலேகான் உள்ளிட்ட முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்த முன்னோடியாக ஹிந்துத்துவா தீவிரவாதிகள், மத்திய பிரதேச மாநிலத்தின் பக்ளியில் பயிற்சி முகாமை நடத்தியுள்ளனர்.1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ’ப்ளாக் ஃப்ரைடே’ என்ற திரைப்படம் தங்களுக்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த தூண்டுதல் அளிப்பதற்காக ஹிந்துத்துவா தலைவர்கள் போட்டுக் காட்டியதாக இவ்வழக்கில் சிக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை முக்கிய சூத்திரதாரி என்று கூறிய நிரபராதியான ஷபீர் மஸீஉல்லாவை குண்டுவெடிப்பு நடக்கும் முன்பே மும்பை க்ரைம் ப்ராஞ்ச் கைதுச் செய்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது.குண்டுவைத்தவர் என்று ஏ.டி.எஸ் கூறும் இன்னொரு நிரபராதியான ஸாஹித் மஜீத் சம்பவம் நடக்கும்போது மாலேகானில் இருந்து 500 கி.மீ தொலைவில் இருந்தார்.

Source : thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக