திங்கள், ஜூன் 17, 2013

உறவை முறித்தது ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டு பா.ஜனதா கூட்டணி உடைந்தது !

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ , ஐக்கிய ஜனதா தளம் இடையே கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வந்த கூட்டணி நேற்று முறிந்தது. 


இதையடுத்து, பாரதிய ஜனதா கூட்டணி உடைந்தது. பீகார் சட்டப்பேரவையில் பா.ஜ. ஆதரவு இல்லாததால்  முதல்வர் நிதிஷ் குமார் நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். கவர்னரை சந்தித்து, ‘பாஜவுடன் உறவு முறிந்து விட்டது; பலத்தை பேரவையில் நிரூபிப்பேன்’ என்று நிதிஷ் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் பா.ஜ , ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. தே.ஜ கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் இரண்டாவது பெரிய கட்சியாக கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வந்தது. பா.ஜ. வுடன் கூட்டணியில் இருந்தாலும், குஜராத் கலவரத்தில் தொடர்புடைய முதல்வர் நரேந்திர மோடியிடம் இருந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போதும் விலகியே இருந்தார்.

இந்நிலையில் பா.ஜ தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், பா.ஜ.வுடன் உறவை முறித்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தது. இது குறித்து தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜ கட்சியின் 11 அமைச்சர்களிடம் முறைப்படி தெரிவிக்க முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2 நாட்களாக முயற்சித்தார். அவர் அழைப்பு விடுத்த கூட்டங்களில் பா.ஜ அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.என்பது குறிப்பிடதக்கது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக