வெள்ளி, ஜூன் 07, 2013

தலித் மாணவர்களின் தற்கொலை:மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்!

புதுடெல்லி: இந்தியாவின் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் சந்திக்கும் பாரபட்சம் குறித்து விளக்கம் கேட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் 18 தலித் மாணவர்கள் தற்கொலைச் செய்துள்ளனர். இதனை பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கான்பூர் ஐ.ஐ.டி, பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் சயின்ஸ், டெல்லியில் ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ்(எயிம்ஸ்) உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் தற்கொலைச் செய்துள்ளதாக மனித உரிமை கமிஷன் தனது நோட்டீஸில் கூறியுள்ளது.
பத்திரிகை செய்திகள் சரியென்றால், கல்வி நிலையங்களில் கடுமையான பாரபட்சம் நிலவுவதாக கமிஷன் நோட்டீஸில் கூறியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் குறித்து பத்திரிகைச் செய்திகளையும், தேசிய மனித உரிமை கமிஷன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
Source : thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக