வெள்ளி, ஜூன் 21, 2013

அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை குறைக்கவேண்டும் -ஒபாமா!

பெர்லின்: ரஷியா சம்மதித்தால் அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். ஜெர்மனி சென்றுள்ள ஒபாமா அங்குள்ள ஜெர்மனியை இரண்டாக பிரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண்டன்பர்க் கேட் பகுதியில் அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக உலக நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் நாம் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் உண்மை.


அணு ஆயுதங்கள் இல்லாத சூழ்நிலையில்தான் நாம் பயமில்லாமல் வாழ முடியும். அணு ஆயுதக் குறைப்பு குறித்து ஏற்கெனவே ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். கடந்த 2010-ஆம் ஆண்டு ரஷியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துக்கொண்டன. தற்போது ரஷியா சம்மதித்தால் அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொள்ளும். அணு சக்தியை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதான் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் ஒபாமா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக