வியாழன், ஜூன் 13, 2013

கிரீஸ் செய்தி நிறுவனம் மூடல்! : செய்தி நிறுவனமே செய்தியானது!

கிரீஸ் நாட்டில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோதே ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் சுமார் 2,700 பேருக்கு உடனடியாக வேலை பறிபோனது. கீரிஸ் நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான ஈ.ஆர்.டி (ERT) நிறுவனத்தின்
செய்தியாளர்கள் வழக்கம்போல் செய்தித் தொகுப்பை வழங்கிக்கொண்டிருந்தனர். செய்தி வாசித்துக் கொண்டிருந்த போதே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டது. செய்தியாளர்களே ஒரு சில நிமிடங்களில் செய்தியாக மாறினர்.
கிரிஸ் நாட்டு ஈ.ஆர்.டி (ERT) தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகத்தை அந்நாட்டு அரசு மூடியதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் என பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொலைக்காட்சி கட்டடத்தை விட்டு ஊழியர்கள் வெளியேற மறுத்தனர்.
இந்த செய்தி நிறுவனத்தில் பலர் தேவையில்லாமல் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், யாரும் பார்க்காத நிகழ்ச்சிகளை தயாரிக்க அதிகச் செலவு செய்யப்படுவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் சிமோஸ் கெடிகோக்லோ (Simos Kedikoglou) தெரிவித்தார். 
இந்த நிறுவனம் இயங்கிய இடத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் குறைவான எண்ணிக்கையில் ஊழியர்களுடன் புதிய தொலைக்காட்சி இயங்கும் என தெரிவித்தார். போராடும் ஊழியர்கள் நிலையத்திற்குள் செல்லாதவாறு காவல்துறை தற்காத்து வந்தனர். சில ஊழியர்கள் வெளியே வர மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈ.ஆர்.டி (ERT) நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனியார் செய்தி நிறுவனங்களும் 5 மணி நேரமாக செய்திச் சேவையை நிறுத்தின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக