வியாழன், ஜூன் 06, 2013

இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்! பின்னணியில் மொஸாத்?

இஸ்ரேல் தூதரக அதிகாரி பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சர்வதேச எண்ணெய் லாபியும், அரசாங்கத்தின் சில தீய சக்திகளுமே காரணம் என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது காஸ்மி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். தான் இவ்வழக்கில் நிரபராதி என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கூறியது: ஈரானுடனான இந்தியாவின் நல்லுறவை சீர்குலைக்கவும், குறைந்த செலவில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடுக்கவும் எண்ணெய் லாபிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. அரசில் இடம்பெற்றுள்ள சில தீய சக்திகளும், டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவும் தேச நலனுக்கு எதிராக செயல்படுகின்றன என்று காஸ்மி தெரிவித்தார்.
குண்டுவெடிப்புக்கு பிறகு வெளியான புகைப்படங்களில் போலீஸ் தடைச்செய்த பகுதியில் காணப்படும் ஒரு வெளிநாட்டவர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது சந்தேகத்திற்கிடமானது என்று காஸ்மியின் வழக்குரைஞர் மஹ்மூத் ப்ராச்சா நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத், இக்குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். காஸ்மி மீது யு.ஏ.பி.ஏ சட்டம், வெடிப்பொருள் சட்டம் ஆகியவை சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Source : Newindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக