செவ்வாய், ஜூன் 18, 2013

வெளிநாடுகளுடன் உறவை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம்! - ஈரானின் புதிய அதிபர் ரூஹானி!

வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்துவதும், பொருளாதார நிலைமையை சீர்செய்வதுமே முக்கிய நோக்கம் என்று ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

">ஈரான் அதிபர் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்ற ஹஸன் ரூஹானி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: நான் தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிடமாட்டேன். கடந்த காலத்தில் நடந்த தவறுகளில் இருந்து பாடம் உட்கொண்டு நாட்டிற்கு சேவை புரிவேன். அணுசக்தி திட்டம் மேலும் வெளிப்படையாக அமையும். ஆனால், யுரேனியத்தை செறிவூட்டுவதை நிறுத்தமாட்டோம். மேற்கத்திய நாடுகள் போதிய நியாயங்கள் இன்றி ஈரானின் மீது தடைகளை விதித்துள்ளன. இவ்வாறு ரூஹானி கூறினார்.
ரூஹானி ஈரான் அதிபராக வருகிற ஆகஸ்ட் மாதம் பதவி ஏற்க உள்ளார்.

Source : Newindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக