உலகில் 5 வயதுக்கு முன்பாக இறக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட அரைவாசிப்
பேர் போஷாக்கின்மையாலேயே இறப்பதாக மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில்
வெளியான ஆய்வு ஒன்று கூறியுள்ளது. அத்துடன் இந்த இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அது கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மையின் விளைவுகளால் இறப்பதாக அது கூறுகிறது.
பெரும்பாலான இப்படியான இறப்புக்கள் ஆப்ரிக்க மற்றும் ஆசிய ஆகிய கண்டங்களிலேயே நடக்கின்றன. போஷாக்கு குறித்த ஒரு சர்வதேச மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் இந்த வார இறுதியில் தலைமை தாங்கவிருக்கும் நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.
போஷாக்கின்மையை தடுக்க செல்வந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டிலும் மேலதிகமாக 100 கோடி டாலர்களை வழங்க முன்வர வேண்டும் என்று இது குறித்த செயற்பாட்டாளர்கள் கோருகிறார்கள். 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக