வெள்ளி, ஜூன் 21, 2013

ஆர்.எஸ்.எஸ் தலைவருடனான சந்திப்பை புறக்கணித்த அத்வானி!

புதுடெல்லி:பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரக் கமிட்டி தலைவராக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி நியமிக்கப்பட்டதில் கடுமையான அதிருப்திஅடைந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்திப்பதை ரத்துச் செய்துள்ளார்.


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பாஜக தலைவர் அத்வானியை புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேச முடிவு செய்திருந்தார். ஆனால் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்தச் சந்திப்பை அத்வானி ரத்துச் செய்துள்ளதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரசார குழுத் தலைவராக அறிவித்ததற்கு அதிருப்தி தெரிவித்து பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார் அத்வானி. இதையடுத்து அத்வானியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த மோகன் பாகவத் அவரை சில வாக்குறுதிகளின் அடிப்படையில் சம்மதிக்க வைக்க அழுத்தம் கொடுத்தார். அதையடுத்து அத்வானி தனது முடிவை வேண்டா வெறுப்பாக மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கோவாவில் நடந்த பா.ஜ.கவின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்த அத்வானி, அதற்கு காரணமாக  தனதுஉடல்நலனைத்தான் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் அதிருப்தியால் புறக்கணித்தார் என்பது தெளிவானது. அதே சமயம் பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரியை ஏற்கெனவே திட்டமிட்டபடி புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார் மோகன் பாகவத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக