செவ்வாய், ஜூன் 11, 2013

பா.ஜனதாவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது! - காங்கிரஸ்!

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த முயற்சி நடந்து வருகிறது. மோடியை நியமிப்பதால் மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று பா.ஜனதா கணக்கு போட்டுள்ள நிலையில், மோடியின் நியமனத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-

பா.ஜனதாவின் பிரச்சாரக்குழு தலைவராக மோடியை நியமித்திருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். பா.ஜனதாவின் முழுமையான சீரழிவுக்கு இது ஆரம்பம் ஆகும். 

அத்வானி ராஜினாமா செய்திருப்பது பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. மோடிக்கு உயர் பதவி கொடுத்தால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் ஏற்கனவே கூறினோம். அதில் ஒன்றுதான் அத்வானி ராஜினாமா.

மோடியை பிரச்சார குழு தலைவராக நியமித்திருப்பதால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களவைத் தேர்தலில் எந்த மாற்றம் ஏற்படாது. காங்கிரஸ் கட்சி தனது பாதையில் தொடர்ந்து செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக