திங்கள், ஜூன் 10, 2013

பாஜக பிரசாரக்குழு தலைவராக மோடி! பாரதிய ஜனதாவை ஒரு போட்டியாக கருதவில்லை! - காங்கிரஸ்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாவின் பிரசாரக் குழு தலைவராக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி  நியமிக்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. அதே நேரத்தில், மூத்த தலைவர் அத்வானியின் ஒப்புதலுடனேயே மோடி நியமிக்கப்பட்டதாக பாரதிய ஜனதா மீண்டும் சமாளித்ததுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு 2014-ம் ஆண்டுக்கான பிரசாரக் குழு தலைவராக மோடி  நியமிக்கப்பட்டுள்ளார்.
மோடிக்கு முக்கியத்துவம் அளிப்பதை மூத்த தலைவர் அத்வானி விரும்பவில்லை, அதன் காரணமாக இரண்டு நாள் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தார் என்ற செய்தி வெளியாகின.
இதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறது. பிரித்தாளும் அரசியல் செய்வதில் மோடி  வல்லவர் என்றும், குஜராத் மாநிலத்தில் கேசுபாய் பட்டேல் பல தலைவர்களை ஓரம் கட்டியது போல அத்வானியும் ஓரம் கட்டப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
அதேசமயம் பாரதிய ஜனதாவை ஒரு போட்டியாகக் கருதவில்லை என்றும், எனவே பிரசாரக் குழுத் தலைவராக மோடி  இருப்பது தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
மோடிக்கு ஆதரவு கிடைக்குமா?
நரேந்திர மோடியின் தேர்வு பல்வேறு விவாதங்களை பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும், வெளியேயும் பல்வேறு விவாதங்களை தோற்று வித்திருக்கிற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி  அறிவிக்கப்படுவாரா? அதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புதல் அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக