பெங்களூர்: இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவுஸர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ வன்மையாக கண்டித்துள்ளது. இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரின் கொலையாளிகளை குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறு என்.சி.ஹெச்.ஆர்.ஓ, சி.பி.ஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
என்.சி.ஹெச்.ஆர்.ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:
போலி என்கவுண்டர் வழக்கில் உயர் அதிகாரிகள் மற்றும் குஜராத் அரசில் முக்கிய நபர்களின் பங்கினை வெளிச்சத்துக்கொண்டுவந்தவர்களை வாயை மூடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இஷ்ரத்தின் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சூழலில், சாட்சிகளை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான திட்டத்தை அரசு தயாரிக்கவேண்டும். வழக்கின் விசாரணை நேரான வழியில் கொண்டு செல்லாமல் தாமதப்படுத்தும் சி.பி.ஐயின் நடவடிக்கையை நீதிமன்றம் விமர்சித்திருந்தது.
இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கவேண்டும். போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிச் செய்யும் விதம் விசாரணையை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இஷ்ரத்தின் தாயாரை கொலைச் செய்ய முயன்றவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும்.இவ்வாறு என்.சி.ஹெச்.ஆர்.ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக