செவ்வாய், ஜூலை 01, 2014

ரஷ்யாவில் 14 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில்  ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டரில் மொத்தம் 14 பேர் சென்றனர்.

ரஷ்யாவில் நிகழ்ந்த ஆகக் கடைசி ஆகாயப் போக்குவரத்து விபத்தாக இது கருதப்படுகிறது.
Mi-8 ரக ஹெலிகாப்டரில் தீயணைப்பு வீரர்களை ஏற்றிச் சென்ற அந்த ஹெலிகாப்டர் காபாரொவ்ஸ்க் மாகாணத்தில் செகுண்டா என்ற கிராமத்தில் விழுந்து நொறுங்கியது.

அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரின்  நிலை குறித்து இன்னமும் தெரியவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக