அதன்படி இன்று காலை 11 மணியளவில் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் வெற்றி விழா தொடங்கியது. காம்பிர் தலைமையிலான ரசிகர்கள் திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து வீரர்களுக்கு தங்கப்பதக்கமும், நீல நிற சால்வையும் அணிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அணி உரிமையாளர் ஷாரூக்கான் மேடையில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.வண்ண, வண்ண வான வேடிக்கைள் காண்பிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வெற்றி விழாவை கண்டுகளிக்கவும்,பேரணியில் பங்கேற்கவும் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.அவர்கள் பேரணியாக வெளியேறியபோது பெரும் நெரிசல் ஏற்பட்டது.இந்நேரத்தில் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஆகி,பின்னர் மோதல் வெடித்தது.
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பலர் ரத்தக்காயங்களுடன்,கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.அதனை பார்த்து ஆத்திரமுற்ற ரசிகர்களில் மற்றொரு தரப்பினர்,தடுப்பு வேலிகøள் உடைத்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக