செவ்வாய், மே 22, 2012

மனித உரிமை மீறல்: ராணுவத்தினர் மீது 11 வழக்குகள்!


புதுடெல்லி:மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ராணுவத்தினர் மீது 11 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது. இவ்வழக்குகள் 2009-ஆம் ஆண்டு முதல் பதிவுச் செய்யப்பட்டதாகும். ஆனால், இதைப்போன்ற 158 வழக்குகள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.

ராணுவத்தினர் மீது 2009-ஆம் ஆண்டு முதல் 169 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தற்பொழுது விசாரணையில் இருக்கு 11 வழக்குகள் 6 கடந்த ஆண்டு பதிவுச் செய்யப்பட்டவை. 2009-ஆம் ஆண்டு முதல் கிடைத்த புகார்களில் 79 புகார்கள் போலியானவை என விசாரணையில் தெரியவந்தது. 2010-ஆம் ஆண்டு முதல் கிடைத்த 57 புகார்களில் 52 புகார்களும் போலியானவையாகும். கடந்த ஆண்டு 33 புகார்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 27 புகார்கள் போலியானது என்று அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலம் அபகரிப்புச் செய்யப்பட்டது தொடர்பாக 924 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக அந்தோணி கூறினார். ஓய்வுப்பெற்ற ராணுவத்தினரின் மறுவாழ்வு தொடர்பாக வேலை ஏமாற்று மோசடிகள் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த கம்பெனி விவகார அமைச்சகத்திடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இணை அமைச்சர் பள்ளம் ராஜூ தெரிவித்தார். இதுத்தொடர்பாக பாராளுமன்ற அவைக்குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை தான் கம்பெனி விவகார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சில அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக