பெங்களூர்:நில விடுவிப்பு புகாரைத் தொடர்ந்து கர்நாடகா மாநில பா.ஜ.கவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது 2 மகன்கள் மீது வழக்கு தொடர லோக் ஆயுக்தா நீதிமன்றம் நேற்று(திங்கள்கிழமை) உத்தரவிட்டது.
வழக்குரைஞர் வினோத் என்பவர் லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பத்ராவதியில் 49 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இருந்தது.
அதை, அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியைப் பயன்படுத்தி, கையகப்படுத்திய நிலத்தை விடுவித்துள்ளார். அந்த நிலத்தை அவரது மகன்களுக்குச் சொந்தமான தவளகிரி பிராப்பர்டீஸ் நிறுவனத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல பத்ராவதி வனப் பகுதிக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார். அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை திங்கள்கிழமை விசாரித்த லோக் ஆயுக்த நீதிமன்ற நீதிபதி என்.கே.சுந்திரராவ், எடியூரப்பா, அவரது இரு மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக