வியாழன், மே 31, 2012

உலக செஸ் சாம்பியன்: விஸ்வநாதன் ஆனந்திற்கு குவியும் பாராட்டுகள்

உலக செஸ் சாம்பியன்: விஸ்வநாதன் ஆனந்திற்கு குவியும் பாராட்டுகள்மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல் வீரரான போரிஸ் கெல்பாண்டை வீழ்த்திய இந்திய செஸ் வீரரும், நடப்பு சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இச்சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
 
இவ்வெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது;
 
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளதால் இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளார். இந்தியாவில் வளரும் தலைமுறையினருக்கு அவர் ஒரு எடுத்துக் காட்டாளராக விளங்குகிறார். குறிப்பாக விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். அவர் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது;
 
இந்த வெற்றிப் பாதை மென்மேலும் தொடரவேண்டும். இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்.
 
வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பதினான்கு கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக