புதுடெல்லி:மேற்குவங்காள முதல்வர் மமதா பானர்ஜிக்கு பிரசிடென்சி பல்கலைக்கழக மாணவியான தானியா பரத்வாஜ் மனம் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
தொலைக்காட்சி சேனல் நேர்முக நிகழ்ச்சியின் போது அரசு நடவடிக்கைகளைக் குறித்த தனது கேள்வியால் கோபமடைந்து பதிலளித்த மமதா பானர்ஜி, தன்னையும், தனது சக மாணவர்களையும் மாவோயிஸ்ட் என அழைத்தது ஏன்? என கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார் தானியா.
“சூடான வாத பிரதிவாதங்களை எதிர்பார்த்தே நான் உள்ளிட்ட மாணவர்கள் குழுவினர் சி.என்.என்- ஐ.பி.என் கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு சென்றோம். ஆனால், அங்கு நடந்தவற்றைக் குறித்து சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்று தானியா கூறுகிறார்.
“மேற்குவங்காளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபரான நீங்கள், என்னையும், அவையில் இருந்தோரையும் மாவோயிஸ்டுகள் என்றும், சி.பி.எம் உறுப்பினர்கள் என்றும் ஆட்சேபித்தது ஏன்? இத்தகைய ஒரு மரியாதை கிடைக்கும் அளவுக்கு நாங்கள் என்ன செய்துவிட்டோம்? அமைச்சர் மதன் மித்ரா மற்றும் அரபுல் இஸ்லாம் ஆகியோரின் செயல்பாடுகளை கட்சி அங்கீகரிக்கிறதா? என்றல்லவா நாங்கள் கேள்வி எழுப்பினோம்.” என்றும் தானியா கடிதத்தில் மமதாவிடம் கேள்வி எழுப்புகிறார்.
ஒருவரின் குணத்தை பரிசோதிக்க விரும்பினால் அவருக்கு அதிகாரத்தை வழங்கினால் போதும் என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கனின் வார்த்தைகளை நினைவுப்படுத்தியவாறு தானியா கடிதத்தை முடித்துள்ளார்.
தன்னை கேலிச் செய்யும் வகையில் கார்ட்டூன் வரைந்த கல்லூரி பேராசிரியரின் கைது தொடர்பான கேள்விகளைத் தொடர்ந்து சேனல் நிகழ்ச்சியின் போது மமதா கோபமானார். தன்னை கொலைச் செய்வதற்கான அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் கார்ட்டூன் என மமதா அரைவேக்காட்டுத் தனமாக பதில் அளித்தார்.
தொடர்ந்து, மகளிருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மாவோயிஸ்ட் தலைவரின் மரணம் குறித்தும் தானியா எழுப்பிய கேள்விகளுக்கு கடுமையாக பதில் அளித்தார் மமதா. பின்னர் சி.பி.எம் காரர்களுக்கும், எஸ்.எஃப்.ஐ உறுப்பினர்களுக்கும் பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை என கூறி மமதா நிகழ்ச்சியில் இருந்து எழுந்துசென்று விட்டார். ‘இதனை நீங்கள் ஏன் முன்னரே என்னிடம் தெரிவிக்கவில்லை’ என்று நிகழ்ச்சியின் மாடரேட்டரையும் ஒரு பிடி பிடித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக