திங்கள், மே 28, 2012

அர்ஜெண்டினாவில் டயனோசரஸ் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு !

உலகில் அழிந்து போன ராட்சத உருவம் கொண்ட டயனோசரஸ்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் டயனோசரஸின் பல உடல் பாகங்கள் புதை படிவங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இவற்றை சுபுட் நகரில் எடிஜியோ பெருஜிலோவில் உள்ள புதை பொருள் அருங்காட்சியகத்தை சேர்ந்த டைஜியோ பால் தலைமையிலான 25
பேர் கொண்ட குழு கண்டுபிடித்தனர்.

தலைநகர் பியூனஸ் ஏர்சில் இருந்து 1800 கி.மீட்டர் தூரத்தில் சுபுட் மாகாணத்தில் உள்ள கான்டர் மலை பகுதியில் அவற்றின் மூளை பகுதியை மூடியிருக்கும் தலை எலும்பு, முதுகெலும்பு பாகங்கள் புதைந்து கிடந்தன. இது அபெலிசரஸ் குடும்பத்தை சேர்ந்த டயனோசரஸ் என்பது தெரிய வந்துள்ளது. இது மாமிசம் சாப்பிடும் வகையை சேர்ந்தது. இவை 70 லட்சம் முதல் 1 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தற்போது இவற்றின் சில பாகங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விரைவில் முழு உடல் பாகங்களின் புதை படிவங்கள் கிடைக்கும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக