வியாழன், மே 31, 2012

வடகொரியாவில் எங்களின் உளவாளிகள் உள்ளனர்’ – அமெரிக்கா !

US denies parachuting spies into North Koreaசியோல்:வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை உளவறிய தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவத்தினரின் சிறப்புக் குழு அந்நாட்டில் இயங்குவதாக அமெரிக்க ராணுவ கமாண்டர் கூறியுள்ளார்.தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டரான ஜெனரல் நீல் டோலியை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி இச்செய்தியை
வெளியிட்டுள்ளது.
வடகொரியா ராணுவத்தின் நிலத்துக்கு கீழே உள்ள மையங்களைக் குறித்து கண்டுபிடிப்பதுதான் தங்களின் நோக்கம் என டோலி கூறுகிறார். ஃப்ளோரிடாவில் உள்ள டாம்பாவில் நடந்த சிறப்பு படையின் மாநாட்டில் டோலி இதனை தெரிவித்தார்.
கொரியா போருக்குப் பிறகு வடகொரியா ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுரங்கங்களை நிர்மாணித்துள்ளதாகவும், இது அமெரிக்காவின் செயற்கை கோளில் பதிவாகாது என்றும் டோலி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக