வெள்ளி, மே 25, 2012

ஏர்இந்தியாவின் ட்ரீம்லைனர் சோதனை வெற்றி !

ஏர்இந்தியா விமான பைலட்டுகள் இந்தியாவின் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் இந்த ‌வேளையில் அமெரிக்காவில் ஏர்இந்தியா நிறுவனத்தில் சேர்க்கப்பட உள்ள போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்தது.போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் பயிற்சி பெற தயக்கம் காட்டியது மட்டுமின்றி எதிர்ப்பு தெரிவித்தும், ஏர்இந்தியா விமான பைலட்டுகள் கடந்த 16 நாட்களாக காலவரையற்ற ஸ்டிரைக்கில்
ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஏர்இந்தியாவின் கனவு விமானமான போயிங் 787- ட்ரீம்லைனர் விமானம் நேற்று அமெரிக்காவில் முதன்முறையாக பரிசோதனை ஓட்டம் நடந்தது. இது வெற்றிகரமாக அமைந்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
 
அமெரிக்காவின் டிம்பெர்க், ரான்டிநெவ்லி ஆகிய 2 பைலட்டுகள் கலிபோர்னியாவின் சார்லஸ்டோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 5 மணிநேரம் விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறங்கி காட்டினர். விரைவில் ஏர்இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக