வியாழன், ஜூலை 31, 2014

லிபியாவின் பென்காசி நகரை கைப்பற்றியதாக இஸ்லாமிய போராளிகள் அறிவிப்பு

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசி நகரை கைப்பற்றி விட்டதாக இஸ்லாமிய போராளிகள் அறிவித்துள்ளனர்.

பிற நாட்டின் செயற்கை கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்கா செயற்கைகோள்

சீனா மற்றும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை உளவு பார்க்க அமெரிக்கா செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

காமன்வெல்த்தில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: அரியானா அரசு அறிவிப்பு

அரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா நேற்று சண்டிகாரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் அரியானாவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்து அளிப்பது என்று மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புனே அருகே நிலச்சரிவு: 5 பேர் பலி

 புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கனக்கானோர் நிலச்சரிவு ஏற்பட்ட வீடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

தொடரும் யூத பயங்கரவாதம் கண்டுகொள்ளாத ஐ.நா. சபை : பலி எண்ணிக்கை 1,321 ஆக உயர்

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடல்வழி, வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் நேற்று மட்டும் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 260-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.

புதன், ஜூலை 30, 2014

’தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ - கலைஞர் கண்டன பொதுக்கூட்டம்

தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை :

’’ திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 22-7-2014, செவ்வாய்க்கிழமை, மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க;  தென்சென்னை மாவட்ட தி.மு.க.வின் சார்பில் 31-7-2014 வியாழன் அன்று மாலை 6 மணியளவில் முத்தமிழறிஞர்  கலைஞர்  சிறப்புரையாற்றும் “தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” எனும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை, தியாகராய நகர் பேருந்துநிலையம் அருகில் நடைபெறுகிறது.

Save Gaza Free Palestine - மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் சவுத்ஆம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியில் மொயின் அலி என்ற முஸ்லிம் இளைஞர் இடம் பெற்றுள்ளார்.

பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக்கூடாது: தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது-

ஞாயிறு, ஜூலை 27, 2014

உ.பி.யில் வகுப்புவாத மோதலுக்கு 3 பேர் பலி: 144 தடை- கண்டதும் சுட உத்தரவு

உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில் நிலத் தகராறு வகுப்புவாத மோதலாக மாறிய சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

லிபியாவில் எழுச்சி பெற்ற போராளிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசுப் படைகள்

லிபியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி 2011ல் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுச்சி பெற்ற போராளிகளை கட்டுப்படுத்த முடியாமல் அரசுப் படைகள் திணறி வருகின்றன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்க மழை

20-வது காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற 69 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஓம்கார் ஒட்டாரி வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

வெள்ளி, ஜூலை 25, 2014

அல்ஜீரிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் வடக்கு மாலியில் கிடைத்துள்ளது: மாலி அதிபர் தகவல்

நேற்று பிற்பகல் ஏர் அல்ஜீரியாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

வியாழன், ஜூலை 24, 2014

பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும் நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாகவே உள்ளது. 

மலேசிய விமானம் தகர்ப்பு : சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விசாரணை  தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நியூயார்க்கில் உள்ள ஐநா  தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. 15 உறுப்பு நாடுகளும் கலந்து  கொண்டன.

குஜராத் அரசின் அலட்சியத்தால் ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளது: காங்கிரஸ்

குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 238 சிங்கங்கள் பலியானதாக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஹர்ஷத் ரிபாடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஸ்ஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசா நகரத்தில் மருத்துவமனை ஒன்றில் இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடிய ஷெல் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டும், குறைந்தது ஏழு பேர் காயமடைந்தும் இருக்கின்றனர். காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவப் பணியாளர்கள்.

புதன், ஜூலை 23, 2014

விவசாய கடன் தள்ளுபடிக்கு நிபந்தனை: ரோஜா கண்டனம்

ஆந்திர மாநிலத்தில் தற்போது மீண்டும் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதியின் போது எந்த வித நிபந்தனையும் இல்லாமல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

தரையோடு தரையாக ஸ்கேட்டிங் சென்று 8 வயது சிறுவன் சாதனை

லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். 180 டிகிரிக்கு காலை விரித்து தரையோடு தரையாக சென்று சாதனை படைத்துள்ள சிறுவனின் பெயர் மெட்வின் தேவா.

நோன்பிருந்த இஸ்லாமியரை வற்புறுத்தி சாப்பிட வைத்த சிவசேனா எம்.பி.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். 

செவ்வாய், ஜூலை 22, 2014

மோடிக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க சீக்கியர்கள் கையெழுத்து வேட்டை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ரத்து செய்யுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வலியுறுத்தி அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் 'ஆன் லைன்' மூலம் கையெழுத்து வேட்டை பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

பேராக்கில் புகைமூட்டம்: பள்ளிகள் மூடப்படுகின்றன

பேராக், சித்தியவான் மாவட்டத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவுவதால் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்படுகின்றன.
இன்று மதியம் 1.10 நிலவரப்படி, சித்தியவான் பகுதிகளின் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 239-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் IPU எனும் காற்றுத் தூய்மைக்கேடு 250-ஆகப் பதிவாகியுள்ளது.

லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிக்கு காரணமான 5 வீரர்கள்

லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெற்றி பெற்றது. இதற்கு காரணமான 5 வீரர்கள் வருமாறு:–
இஷாந்த்சர்மா: தனது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை திணறடித்தார். 74 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

17 வயது இளம்பெண்ணை பறி கொடுத்த தந்தை ரஷிய அதிபர் புதினுக்கு எழுதிய கடிதம்

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  MH 17 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற போது நடத்தப்பட்ட தீவிரவா  தாக்குதலில் விமானத்தில் இருந்த 298 பயணிகளும் உடல் கருகி பலியாகினர். 

சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறை

இந்தியாவின் 67–வது சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மராட்டியம், டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

வடமாநிலங்களில் தக்காளி விலை கடந்த ஒரு வாரத்தில் 2 மடங்கு உயர்ந்துள்ளது.

டெல்லியில் குற்றங்கள் அதிகரிப்பு!

நாட்டின் தலைநகரான தில்லியில் குற்றங்களுக்குப் பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்கு குற்றவழக்குகள் அதிகரித்து வருகின்றன. நிகழாண்டின் ஜூன் வரையிலான 6 மாதங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 70 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது.

சனி, ஜூலை 19, 2014

ஹெல்மெட்டில் உலக கோப்பை படம்: ஜெர்மனி கார்பந்தய வீரரின் முடிவுக்கு பிபா எதிர்ப்பு

கார் பந்தயமான ‘பார்முலா–1’ போட்டியின் ஒரு சுற்று ஜெர்மனியில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இதில் மெர்சிடிஸ் அணி சார்பில் ஜெர்மனி வீரர் ராஸ்பேர்க் பங்கேற்று வருகிறார்.

காசா தாக்குதல் பற்றி விவாதிக்க மறுப்பு: எதிர்க்கட்சிகள் அமளியால் மேல்–சபை ஒத்திவைப்பு

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம்: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு

மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.-17 விமானம் நேற்று உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர்.

நீதிபதி நியமனம்: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது கொலிஜியம்!

கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியான கே.எல்.மஞ்சுநாத்தை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிப்பதற்கான தீர்மானத்தை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்ற மோடி அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நியமனக்குழு(கொலிஜியம்) நிராகரித்துவிட்டது.

காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல்

காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தரைவழித்தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது

வியாழன், ஜூலை 17, 2014

பிரேசிலுக்கு சர்வதேச கால்பந்து சங்கம் பிபா பாராட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பான முறையில் நடத்தியதாக பிரேசிலை, சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) பாராட்டி இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் எல்கார் சதம்

இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கலேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் அம்லா பேட்டிங் தேர்வு செய்தார்.

நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடாவில் உள்ள பிடதியில் ஆன்மீக ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். 

இஸ்ரேல் தாக்குதல்: மோடி எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். 

திங்கள், ஜூலை 14, 2014

ஈராக்கில் கடும் சண்டை: அரசு படை மீட்ட நகரை மீண்டும் கைப்பற்றிய I.S.I.S

ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் I.S.I.S. கிர்குக், திக்ரித், மொசூல் உள்ளிட்ட நகரங்களையும், ஏராளமான சிறு நகரங்களையும் கைப்பற்றி உள்ளனர். அவற்றை மீட்பதற்கு ஈராக் படைகள் போரிட்டு வருகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் விரோத போக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொருளாதார கொள்கைகள் மற்றும் அறிவிப்புகள் இந்த அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது என்று கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமில் சிறுவர் உள்பட நான்கு முஸ்லிம்கள் படுகொலை: போடோ தீவிரவாதிகளின் வெறிச் செயல்!

அஸ்ஸாமில் பக்ஸா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு போடோலாண்ட் தேசிய ஜனநாயக முன்னணி(என்.டி.எஃப்.பி-சோம்ஜித்) தீவிரவாதிகள் கடத்திச் சென்ற 4 முஸ்லிம்களை கொலைச் செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 2 சிறுவர்களும் அடங்குவர்.

வங்காளதேசத்தில் எதிர்ப்பு காரணமாக 200 ஆண்டு பழமையான விபச்சார விடுதி மூடல்

வங்காள தேசத்தில் சமீப காலத்தில் தீவிர இஸ்லாமியத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உள்ளூர் மத குருமார்களும், இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் அங்கு பழைமை வாத விதிகளைத் தீவிரமாக செயல்படுத்தத் துவங்கியுள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: இரண்டு பா.ஜ.க எம்.பி.க்களுக்கு பிடிவாரண்ட்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு அங்குள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஞாயிறு, ஜூலை 13, 2014

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: ஜெர்மனி– அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.இதன் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

புலித்தோல் வர்த்தகம் செய்வதை முதன்முறையாக ஒப்புக்கொண்டது சீனா

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் சமீபத்தில் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன்முறையாக சீன நாட்டு அதிகாரிகள் தங்களது நாட்டில் புலித்தோல் வர்த்தகம் நடைபெற்று வருவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: பலி 150 ஆக உயர்வு

பாலஸ்தீனத்தில் ஹமாஸ்  கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி வருகின்றன. நேற்று 5–வது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்தது.

அமித் ஷாவின் வழக்கறிஞரின் பெயர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகளில் அமித்ஷாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் யு.யு. லலித் பெயரை தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

சனி, ஜூலை 12, 2014

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்!-என்.சி.எஸ்.ஓ கோரிக்கை

அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய அமைப்புகளின் தேசிய கூட்டணி (என்.சி.எஸ்.ஓ.) வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய அளவிலான திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயரில்

சுதந்திர போராட்ட தலைவர்களை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை சிறப்புத் திட்டங்களுக்கு மோடி அரசு சூட்டியுள்ளது.மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன், ஜூலை 10, 2014

இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 259 ரன்கள் குவிப்பு

இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

சீனாவில் கனமழை: நிலச்சரிவில் 17 பேர் மாயம்

சீனாவின் யுனான் மாகாணத்தில் புகாங் மாவட்டம் ஷவா கிராமத்தில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது.

செவ்வாய், ஜூலை 08, 2014

பிரேசில் அணிக்கு டேவிட் லுயிஸ் கேப்டன்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதலாவது அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரேசில்– ஜெர்மனி அணியின் பலப்பரீட்சை நடத்துகின்றன.