வியாழன், ஜூலை 17, 2014

நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடாவில் உள்ள பிடதியில் ஆன்மீக ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். 
பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அவ்வாறு சோதனை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் நித்தியானந்தா. 

பல வருடங்களாக இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று நித்தியானந்தாவின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. மேலும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று பெங்களூர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக