ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணி இன்று அறிவிக்கப்பட்டது.
உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடிய இந்திய 9-வது இடத்தையே பிடித்தது. இருப்பினும், சர்தார் சிங் மீது நம்பிக்கை வைத்த தேர்வுக்குழுவினர் அவரையே மீண்டும் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளனர். துணை கேப்டனாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
16 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:-
கோல்கீப்பர்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ்(துணை கேப்டன்).
தடுப்பாட்டம்: குர்பஜ் சிங், பிரேந்திர லக்ரா, ரூபிந்தர் பால் சிங், கோதாஜித் சிங், வி.ஆர்.ரகுநாத்நடுக்களம்: தரம்வீர் சிங், சர்தார் சிங் (கேப்டன்), தனிஷ் முஜ்தபா, சிங்லென்சனா சிங் கங்குஜம், மன்பிரீத் சிங்
முன்களம்: ராமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், எஸ்.வி.சுனில், குர்வீந்தர் சிங் சாண்டி, நிக்கிம் திம்மையா.
காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி ஜூலை 25-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் ஜூலை 26-ம் தேதி ஸ்காட்லாந்து அணியுடனும், 29-ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும், 31-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியுடனும் விளையாடுகிறது.
இப்போட்டிகளுக்கான பயிற்சி முகாம் தற்போது டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. 12-ம் தேதி வரை வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக