செவ்வாய், ஜூலை 01, 2014

உலகக் கோப்பை கால்பந்து: 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் நைஜீரியா அணியை எதிர்கொண்ட பிரான்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முற்பகுதியில் இருந்தே பந்தினை தங்களது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த நைஜீரிய அணியினர், தாங்களும் கோல் அடிக்காமல், பிரான்சையும் கோல் அடிக்க விடாமல் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனால், முதல் பாதி நேரம் முடிந்து இடைவேளை வரையில் இரு அணிகளும் கோல் ஏதும் பதிவு செய்யாமல் 0-0 என்ற சமநிலையில் இருந்தன. பிற்பகுதியின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அடித்த அசத்தலான ‘ஷாட்’டில் ஸ்கோர் 1-0 என்று உயர்ந்தது.

பின்னர், கோல் கம்பத்தை நோக்கி பிரான்ஸ் வீரர்கள் விரட்டிய பந்தினை நைஜீரிய அணியினர் தடுக்க முயன்ற போது, அது எதிர்வினையாகி பிரான்சின் ஸ்கோர் கணக்கை 2 ஆக உயர்த்தியது. இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்திய பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக