ஞாயிறு, ஜூலை 13, 2014

அமித் ஷாவின் வழக்கறிஞரின் பெயர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகளில் அமித்ஷாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் யு.யு. லலித் பெயரை தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து, மத்திய சட்டத்துறை மூலம் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு யு.யு. லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்ட கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அக்கோப்பு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் லலித் நியமனத்துக்கான உத்தரவு முறைப்படி பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உச்ச நீதிமன்றத்தில் காலியான நீதிபதி பணியிடத்துக்கு மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் பெயரை நீதிபதிகள் தேர்வுக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அது தொடர்பான கோப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின், அலுவலக பரிசீலனையில் இருந்தது.
இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவரது நீதிபதியாக நியமிப்பதில் விருப்பமில்லை என்று மோடி அரசின் சட்ட அமைச்சகம் தெரிவித்தது.அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டுள்ள சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கோபால் சுப்ரமணியம் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைத்திருந்தது.தொடர் விசாரணையில் சொராபுதீன் ஷேக் கொலை வழக்கில் அமித் ஷாவின் பங்கு தெளிவானது.அந்த பகைமையை தீர்க்கும் நோக்கில் கோபால் சுப்ரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை முடக்கியதோடு அமிஷ் ஷாவுக்கு ஆதரவான வழக்கறிஞர் லலிதை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக