புதன், ஜூலை 23, 2014

தரையோடு தரையாக ஸ்கேட்டிங் சென்று 8 வயது சிறுவன் சாதனை

லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். 180 டிகிரிக்கு காலை விரித்து தரையோடு தரையாக சென்று சாதனை படைத்துள்ள சிறுவனின் பெயர் மெட்வின் தேவா.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த சிறுவன் ஜி.எஸ்.ஐ கிவார்ட் மெட்ரிக் பள்ளியில் 3–வம் வகுப்பு படித்து வருகிறான். தரையில் இருந்து சுமார் 9 அங்குலம் உயரத்தில் 10 மீட்டர் தூரத்தை கடந்து லிம்போ ஸ்கேட்டிங் சாதனை படைத்துள்ளார்.

இதே போல மற்றொரு சாதனைப் படைத்துள்ளார். 9 அங்குளம் உயரத்தில் 25 மீட்டர் தூரம் கடந்து உலக கின்னஸ் புத்தகத்தில் மெட்வின் தேவா இடம் பிடித்தார். முந்தைய சாதனையாக கர்நாடக மாநிலம் பெல்ஹாம் பகுதியை சேர்ந்த ரோஹன் மகாகடன என்ற 12 வயது சிறுவனால் நிகழ்த்தப்பட்டது.
இவ்வாறு அந்த சாதனையை மெட்வின் தேவா முறியடித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சை சேர்ந்த நடுவர்கள் மத்தியில் சிறுவன் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கடந்த 5 ஆண்டுகளாக மெட்வின் தேவா ஸ்கேட்டிங் செய்து வருகிறார். ஸ்பீடு ஸ்கேட்டிங் பயிற்சி மூலம் பெற்ற இணைக்கம் மற்றும் ஒத்துப்போகும் தன்மை இரண்டும் சேர்ந்து இந்த சாதனையை செய்ய முடிந்தது என்கிறார் மெட்வின்.
சாதனை சிறுவனின் தந்தை ராஜீ தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக