திங்கள், ஆகஸ்ட் 11, 2014

பிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி!

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘Road to Freedom' என்ற ஆவணப்படத்தில் வீரசவார்க்காருக்கு முக்கிய பங்கினை அளிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.சவார்க்கார் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இதில் உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
2-வது உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவின் ஆதரவை தேடி பிரிட்டீஷ் அரசு அனுப்பிய கிரிஸ்ப் மிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்த சவர்க்கார் வரும் வீடியோவும் ‘சுதந்திரத்திற்கான பாதை’ என்ற வீடியோவில் இடம்பெற்றுள்ளது.நான்கு செகண்ட் நீளம் கொண்ட வீடியோ இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி புரிந்த முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சவர்க்காரின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் நிறுவியிருந்தது.மேலும் மோடியின் சுதந்திர தின உரையில் சவர்க்காரை சுதந்திர போராளியாக குறிப்பிடவிருக்கிறாராம்.மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து மோடி ஆற்றிய உரையிலும் சவர்க்காரை நினைவுக் கூர்ந்தார்.
ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவர்க்கார், மன்னிப்புக்கோரி பிரிட்டீஷ் அரசுக்கு எழுதிய கடிதம் 1970களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.’பாவியாகிய நான் மன்னிப்பை தேடி அரசுக்கு அடிபணிகிறேன்.மன்னிப்பு அளித்து விடுவித்தால் பிரிட்டீஷ் அரசுக்கும், அரசியல் சாசனத்திற்கும் உகந்தவாறு நடந்துகொள்வேன்.என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட வழிதவறிப்போனவர்களை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு வழிமுறைகளின் பால் திரும்ப அழைத்துவருவேன்’ இவ்வாறு 1913-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசுக்கு சவர்க்கார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக