இந்திய தேசம் ஒரு பன்முக தன்மை கொண்ட மதச்சார்பற்ற தேசம் என்பதை ஆட்சியில் இருப்பவர்களும், சில அதிகாரிகளும் மறந்துவிடும் நோய் நீதிபீடத்தில் இருப்பவர்களை பிடித்துக்கொண்டது போலும்.
குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே, தான் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் மகாபாரதம் மற்றும் பகவத் கீதைய 1-ம் வகுப்பில் இருந்தே கட்டாயம் கற்க வைத்திப்பேன் என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
குஜராத் அஹ்மதாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.தவே கூறியது:
மது பாரம்பரியமான குரு சிஷ்ய பரம்பரையை இழந்துவிட்டோம். நாட்டில் சிலர் மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர்.. அத்தகைய மதச்சார்பின்மை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மட்டும் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையையும் மகாபாரதத்தையும் 1-ம் வகுப்பிலே அறிமுகப்படுத்தியிருப்பேன். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவைகள்தான் கற்றுத் தருகின்றன. இவ்வாறு ஏ.ஆர். தவே பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக