வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

MH17: உறவினர் அற்ற சடலங்களை அரசாங்கமே நல்லடக்கம் செய்யும்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட MH17 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்களின் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும் என மகளிர் குடும்பம், மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரொஹானி அப்துல் காரிம்  தெரிவித்தார்.

மேலும், அவ்வாறு நெருங்கிய உறவினர்கள் யாரும் அற்ற சடலங்கள் இருக்குமாயின் அவை சம்பந்தப்பட்ட பயணிகளின் மத நம்பிக்கை படி அடக்கம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே நெதர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும்  DVI எனப்படும் பேரிடர் சவ அடையாள நடைமுறை அனைத்தும் முடிந்த பிறகு தாயகம் கொண்டு வரப்படும் MH17 பயணிகளின் சடலங்கள் முழு மரியாதை செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயினும், விபத்தில் உருக்குலைந்த சடலங்களை தடவியல் பரிசோதனை வழி அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், விமான விபத்தில் சிக்கிய 43 மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்குப் பல நாட்கள் எடுக்கலாம் என ரொஹானி காரிம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக