புதன், ஆகஸ்ட் 27, 2014

கேரளாவில் மது பார்களுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றம் பாராட்டு

கேரளாவில் படிப்படியாக மதுவை ஒழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 418 பார்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க அம்மாநில அரசு மறுத்துவிட்டது.
அரசின் இம்முடிவுக்கு எதிராக பார் உரிமையாளர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் கேரள அரசின் மது ஒழிப்பு கொள்கைக்கு பாராட்டு தெரிவித்தது. எனினும் தற்போதுள்ள மதுபான கொள்கையை பின்பற்றுமாறு அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அதில் மாற்றம் ஏதும் இருந்தால் வரும் செப்டம்பர் 17-ந் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி 418 பார்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் அவற்றின் உரிமத்தை நீட்டிக்க முடியாது என்று அம்மாநில அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி மேலும் 312 பார்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக