வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

ஸின்ஜியாங்கில் மோதல்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் படுகொலை

உய்கூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் ஸின்ஜியாங்க் மாகாணத்தில் உள்ள யர்க்கந்த் நகரத்தில் மோதல் மற்றும் போலீசு துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், பலர் கடுமையான காயமும் அடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை ஒரு குழுவினர் கடுமையான ஆயுதங்களுடன் போலீஸ் நிலையம் மற்றும் அரசு அலுவகங்களளை தாக்கியதாக போலீஸ் கூறுகிறது. இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர் என்று சின்குவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், துல்லியமான புள்ளிவிபரங்களோ, இச்சம்பவத்தின் பின்னணியோ செய்தியில் இடம்பெறவில்லை.
வெளிநாட்டில் வாழும் உய்கூ ர்முஸ்லிம்களின் அமைப்பான வேர்ல்ட் உய்கூர் காங்கிரஸ், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. உய்கூர் முஸ்லிம்கள் ரமலானில் நோன்பு நோற்பதற்கு கம்யூனிச அரசு தடைவிதித்திருந்தது. இவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை போலீஸ் விதித்திருந்தது. தொழுகை மற்றும் இதர மார்க்க சடங்குகளில் பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்டது.இதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கியால் சுட்டதாக வேர்ல்ட் உய்கூர் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் தில்சத் ராஸித் தெரிவித்தார்.
நேற்று மாலை இரண்டு இறந்த உடல்கள் யர்க்கந்த் நகரில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதலில் 23 உய்கூர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ராஸித் தெரிவித்திருந்தார். பின்னர் ராணுவத்தினர் ஏராளமான முஸ்லிம்களை கூட்டுப்படுகொலைச் செய்துள்ளனர். 13 போலீஸ் காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 67 பேரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக