புதன், ஆகஸ்ட் 27, 2014

ஈரானின் ஆதரவுக்கு நன்றி: காலித் மிஷால்!

ஸ்ரேலுக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை எட்டுவதற்கு ஈரான் ஆதரவு பெரிதும் உதவியதாக ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் தெரிவித்துள்ளார்.

ஈரானின் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது:
ஃபலஸ்தீனின் சாதனைகளின் பின்னால் ஈரானின் ராணுவ-பொருளாதார உதவிகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. சிரியா விவகாரம் தொடர்பாக சிறியதொரு கருத்துவேறுபாடு இருந்தபோதும் பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கு அது ஒருபோதும் தடையாவதில்லை. முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபடவேண்டும். அனைத்து முஸ்லிம் நாடுகளுடனும் ஹமாஸ் சிறந்த நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு மிஷால் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக