ஞாயிறு, ஜனவரி 20, 2013

போராடியும் பலனில்லை… டெல்லியில் 45 பாலியல் வழக்குகள் பதிவு !

டெல்லி: மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் தலைநகர் டெல்லியில் 45 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 75 பலாத்கார வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார் அவர் சிகிச்சை பலனின்றி 29-ம் தேதி மரணமடைந்தார். நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வன்முறைக்கு எதிராக பலரும் போராடினர் எனினும் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு ,பலாத்கார முயற்சி போன்றவை தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. மருத்துவ மாணவி மரணமடைந்து ஒரு மாதத்திற்குள்ளாக தலைநகர் டெல்லியில் 45 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 75 பலாத்கார வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 26 வழக்குகளை தவிர்த்து பெரும்பாலானவை குடும்ப நண்பர்கள் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைநகர் டில்லிக்குட்பட்ட பகுதிகளான கோவிந்தபுரி 21, சங்கம் விஹார் 17, மற்றும் ஷாகர்பூர் போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் கற்பழிப்பு வழக்கு 572-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 706 ஆகவும், பலாத்கார முயற்சி வழக்‌கு 2011-ல் 657-ல் இருந்து 2012-ம் ஆண்டில் 727 ஆகவும் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் 94 சதவீத வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ‌நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியுள்ளார். இது குறித்து மக்களிடை‌‌‌‌யே விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருதாகவும் அவர் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் பெண் போலீசாரின் எண்‌ணிக்கை அதிகரிக்கவும்,அவர்களுக்கு தேவையான ரோந்து வாகனம், மோட்டார்சைக்கிள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண் போலீசார் சாதாரண உடை அணிந்து கண்காணிப்பு பணிய‌ில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் நீரஜ் குமார் கூறியுள்ளார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக