கொல்லம்:பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தில் கமல் ஹாசனின் விசுவரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொல்லம் மாவட்டத்தில் விசுவரூபம் திரையிடும் தியேட்டருக்கு முன்பாக நூற்றுக் கணக்கான பாப்புல ஃப்ரண்டின் உறுப்பினர்கள் திரண்டு கண்டனப் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திரைப்படத்தின் காட்சியை நிறுத்துவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. பாலக்காட்டில் நேற்று
காலை 11 மணியளவில் விசுவரூபம் திரையிட்ட தியேட்டருக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். தியேட்டருக்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து போலீஸ் தலையிட்டது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
இதனிடையே கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து விசுவரூபம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக