ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட 2 பேர் ஆளுநரின் ஆலோகர்களாக நியமிக்கப்பட உள்ளனர். பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலக்கிக் கொண்டதையடுத்து, முதல்வர் அர்ஜுன் முண்டா பதவி விலகினார். இதனையடுத்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என ஆளுநர் சையது அகமது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.இந்தப் பரிந்துரையை ஏற்று,ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கொல்கத்தாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான ஆவணத்தில் நேற்று கையெழுத்திட்டார்.
ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததையடுத்து, முன்னாள் மத்திய உள் துறை செயலாளர் மதுகர் குப்தா மற்றும் ஒய்வுபெற்ற சி.ஆர்.பி.எப் இயக்குநர் கே.விஜயகுமார் ஆகியோர் மாநில ஆளுநர் சையது அகமதுவின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக