வெள்ளி, ஜனவரி 18, 2013

நான் ரொம்ப பிஸி ! – போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீண்டும் கோர்ட்டில் மனு !!

நில மோசடி வழக்கில் போலீ சார் சரியாக புலன் விசாரணை நடத்தவில்லை. எனவே போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி கடந்த வாரம் உத்தரவிட்டார். ஆயினும் கமிஷனர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு விலக்கு அளிக்க கோரி கமிஷனர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்க மறுத்து, கமிஷனர் ஆஜராகாமல் இருந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து விசாரணையை நேற்றைக்கு தள்ளிவைத்தார். அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட் டது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி நேற்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு கமிஷனர் ஜார்ஜ் சார்பாக அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், தனக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கமிஷனர் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு இன்று அல்லது வரும் 21ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக