சனி, ஜனவரி 26, 2013

குண்டுவெடிப்பிற்கான சதித்திட்டம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில்தான் தீட்டப்பட்டது ! - என்.ஐ.ஏ!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளும் நாசவேலைகளையும் கட்டவிழ்த்துவிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் வைத்து சதித் திட்டங்களை தீட்டியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டறிந்துள்ளது. ஹிந்துத்துவா தீவிரவாதக்குழுவின் தலைவன் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி 2006-ஆம் ஆண்டு மே மாதம் மூத்த
ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரை நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளான்.
ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் வாங்குவதற்காக அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியுமான பரத்துடன் சேர்ந்து தான் இந்திரேஷ்குமாரிடமிருந்து ரூ.50 ஆயிரம் வாங்கியதாக சுனில் ஜோஷி சுவாமி அஸிமானந்தாவிடம் கூறியிருந்தான். விசாரணையின்போது பரத் இதனை ஒப்புக்கொண்டுள்ளான். நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் வைத்து இந்திரேஷ்குமார், ஜோஷிக்கு ரூ.50 ஆயிரம் அளித்ததையும் பரத் தெரிவித்துள்ளான்.
1999-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் துங்கர்காவோனில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஜோஷியும் இதர இரண்டு நபர்களும் டெட்டனேட்டர்களை சோதனை நடத்தியதற்கும் சாட்சிகள் உள்ளனர். அஜ்மீர் குண்டுவெடிப்பை நடத்துவது தொடர்பான அனைத்து கூட்டங்களும் ஜார்க்கண்டில் உள்ள மிஹிஜாம் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
2007-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி சுனில் ஜோஷியை கொலைச் செய்த பிறகு துப்பாக்கிகளையும், எலக்ட்ரிக் வயர்களும் அடங்கிய இரண்டு பைகளை மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருந்ததற்கும் சாட்சி உண்டு. ராம்ஜி கல்சங்கரா என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவன் இதில் ஒரு பையை எடுத்துவிட்டு மற்றொன்றை நர்மதா நதியில் எறிந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.தற்போது எந்த வழக்கிலும் இந்திரேஷ்குமார் குற்றவாளி இல்லை என்றாலும், புலனாய்வு ஏஜன்சிகளின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 10 பேர் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் கூறியிருந்தார்.                                   1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக