வியாழன், ஜனவரி 31, 2013

விஷம் வைத்து கொல்லப்பட்ட யானையை சுற்றி சுற்றி வந்த குட்டியானை. மலேசியாவில் பரிதாபம் !

அபூர்வ இனத்தைச் சேர்ந்த குள்ள யானைகள், அடுத்தடுத்து பலியானது குறித்து, மலேசிய வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மலேசியா, போர்னியோ தீவில், சாம்பா மாகாணத்தில், குங்யங் ராரா வனப்பகுதி உள்ளது. இங்கு, அபூர்வ வகை குள்ள யானைகள் காணப்படுகின்றன. உலகில், இவ்வகையை சேர்ந்த, 1,500 யானைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், குங்யங் ராரா வனப்பகுதியில், சமீபத்தில், 10 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானைகளை, யாரும்
சுட்டுக் கொன்று தந்தங்களை திருடியதாக தெரியவில்லை.


இந்த யானைகளுக்கு, விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என, வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்துள்ள யானைகள், 4 முதல், 20 வயதுக்குட்பட்டவை. இவ்வாறு இறந்த தாய் யானையை, அதன் குட்டி யானை எழுப்ப முயன்றதையும், அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததையும், வேதனையுடன் வனத் துறையினர் பார்க்க நேரிட்டது.மருத்துவ ஆய்வுக்குப் பின்னரே, யானைகள் இறப்பு குறித்த விவரம் தெரியவரும்.
2



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக