விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பதின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. தணிகை குழு அனுமதி அளித்தபின் அரசு தலையிடுவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்றால் அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. சிந்திக்கவும்: கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார் ஐயா ராமதாஸ். பா.ம.க. கட்சியைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான மரம் வெட்டி குரு, சமீபத்தில் நடந்த வன்னியர்
சாதி மாநாட்டில், “வன்னிய இனப் பெண்களைக் கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” என்று சொன்னதை மக்கள் மறந்து விடவில்லை. ரோட்டோரம் உள்ள மரங்கள் என்னையா பாவம் செய்தது, அதை வெட்டி போட்டுத்தானே ஐயா கட்சி வளர்த்தார். இவரது சகிப்புத்தன்மைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மரங்களே சாட்சி.
சாதி மாநாட்டில், “வன்னிய இனப் பெண்களைக் கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” என்று சொன்னதை மக்கள் மறந்து விடவில்லை. ரோட்டோரம் உள்ள மரங்கள் என்னையா பாவம் செய்தது, அதை வெட்டி போட்டுத்தானே ஐயா கட்சி வளர்த்தார். இவரது சகிப்புத்தன்மைக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மரங்களே சாட்சி.
ஐயா ராமதாஸ் அவர்கள் திடீர் என்று கமஹாசனுக்கு இந்த அளவுக்கு வரிந்து கட்டி கொண்டு வர காரணம் இருக்கிறது, சமீபத்தில் தலித் மக்கள் மீது நடந்த வன்முறைக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு அதரவாக பல்வேறு ஜனநாயக வழிகளில் குரல்கள் எழுப்பின. அதனால் இப்பொழுது, ராமதாஸ் சந்தர்பத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துகிறார். முஸ்லிம் இயக்கங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய கோரியதும் கமலுக்கு ஆதரவாக களம் புகுகிறார்.
இவர் செய்வதுதான் அரசியல், ஆனால் தமிழக அரசு செய்ததை அரசியல் என்கிறார். ரஜினி முதல் கருணாநிதி வரை இதை பேசி தீர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஐயாவோ கொம்பு சீவுகிறார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று படத்தை வெளியிட்டு அதன் மூலம் ஏதாவது பிரச்சனைகள் உருவாகும் பொழுது போலீசை வைத்து அடக்க சொல்கிறார். ஏதாவது அசம்பாவிதம் நடக்கணும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தணும் என்று எதிர்பார்க்கிறாரா? ஏன் இந்த கொலை வெறி ஐயா!
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக