புதன், ஜனவரி 16, 2013

பாகிஸ்தானியர்களின் பத்து தலை எனக்கு வேண்டும்!

இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் நாய்க் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரும் மற்றுமொறு வீரரும் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தலையை வெட்டி கொண்டு போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.
 
முன்னதாக கடந்த ஜனவரி 06_ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரு பக்கமும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
சிந்திக்கவும் : அன்புள்ள சுஷ்மா ஸ்வராஜ் அக்காவுக்கு மனம் திறந்து சில கேள்விகள். சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் காக்கை, குருவிகள் போல் சுட்டு வேட்டையாடப்பட்டனர். அக்கா என்றைக்காவது ஒரு சிங்கள ராணுவ சிப்பாயின் தலையாவது வேண்டும் என்று கேட்டதுண்டா.
 
அடபாவிகளா! இப்படியும் கேவலமா அரசியல் நடத்தணுமா? ஒரு ஜனநாயக நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மனித தலைகளை கேட்கிறார் சுஸ்மா. லோக்கல் ரவுடிகள் போல் என் ஆட்களை எதிர் கோஷ்டி போட்டு தள்ளிட்டான் பதிலுக்கு நாமும் அவர்களில் சிலரை போட்டு தள்ளணும் என்கிற மாதிரி ஒரு ரவுடித்தனமான பேச்சு. பத்து தலைகளை எடுப்பது பிரச்சனைகளுக்கு தீர்வா?
 
இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி பல மதக்கலவரங்களை நடத்தி நாட்டில் அமைதியை குலைத்து ஆட்சியையும் பிடித்தார்கள். இவர்களின் சுயரூபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதும் மக்கள் இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்ததால் எதிர்க்கட்சியாகி போனார்கள். மீண்டும் ஆட்சியை பிடிக்க ராமர் கைகொடுக்க மாட்டார் என்பதால் பத்து தலை வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் போரை உண்டாக்கலாம் என்று பார்கிறார்கள்.
 
இதுதான் இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியமா? போர்வந்தால் எல்லையில் பாகிஸ்தான்காரனோட சண்டை போடுவது யார்?  இந்த அக்காவும் மற்ற அரசியல்வாதிகளும் மூன்றடுக்கு பாதுகாப்பு என்று ஒளிந்து கொள்வார்கள். கடைசியில் இரண்டு நாட்டிலும் சாக போவது ஏழை, எளிய மக்களும், அப்பாவி பொது மக்க்களும்தானே!. சுஸ்மா அக்கா கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! மக்கள் நல்லா விழிச்சுகிட்டு இருக்காங்கள். அவர்கள் தூங்கும் பொழுது சொல்லுங்கள் சரியா அக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக