வியாழன், ஜனவரி 31, 2013

விஸ்வரூபம் பட சர்ச்சை, விஷம் கக்கிய புதிய தலைமுறை !

விஸ்வரூபம் படம் மூலம் எழுந்த சர்ச்சைகளை மைய்யமாக வைத்து பல்வேறு தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடைபெற்றன. இந்த விவாதங்களில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களும், திரைப்பட இயக்குநர்களும், பத்திரிக்கையாளர்களும், வழக்கறிஞர்களும், முன்னாள் தனிக்கை குழு உறுப்பினர்களும் பங்கெடுத்து விவாதித்தனர் புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களில் முஸ்லிம்களுடைய நியாயமான கருத்துக்கள் அதிகமாக எடுத்து வைக்க முடியாதளவிற்கு தொகுப்பாளர்கள் எதிர்தரப்பினரையே வலுவாக பேச
அனுமதித்தனர் என்பது எங்களை போன்ற பார்வையாளர்கள் உணர முடிந்தது.
இந்நிலையில் விஸ்வரூப படத்தின் மீது தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி 29-01-2013 அன்று 10.00 மணிக்கு தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனை விஸ்வரூபம் பட குழுவினர் கொண்டானார்களோ இல்லையோ புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிகமாகவே கொண்டாடி முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியது எனலாம் அந்தளவிற்கு எத்தனை தடைகளை தகர்த்து நீ வெற்றி கொண்டவன் என்ற பாடல்வரிகள் திரும்ப திரும்ப காட்டப்பட்டு பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தார்கள்.
தீர்ப்புக்குப்பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவான நிலை உடையவர்களின் கருத்துக்களை அதிகமாக ஒலிப்பரப்பினர். இதில் தொலை பேசி மூலம் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை தொடர்புகொண்டு கருத்தை கேட்டனர். அவரும் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் கூறியது போல இது இடைக்கால தீர்ப்புதான் இதனை மேல் முறையீடு செய்ய உள்ளோம் என்று கருத்து கூறினார். உடனடியாக குறுக்கிட்ட தொகுப்பாளர் பயங்கரவாதி கசாப்பை பார்த்தபின்புதான் உங்களை மக்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுத்தனர் இன்னுமா நீங்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள் என்ற ஒரு விஷம கருத்தை கக்கி புதிய தலைமுறை தொலைக்காட்சி காவி சிந்தணையில் உள்ளது என்பதை அப்பட்டமாக வெளியிட்டார். படித்த பேராசிரியர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், தமுமுக ம.ம.க என்ற பேரியியக்கங்களின் மூத்த தலைவர், எல்லோராலும் மதிக்க தக்க ஒரு அரசியல் தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தமிழக பிரதநிதி, மக்கள் உரிமை என்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் என்ற தகுதிகளை உடைய ஒருவரை அந்த இடத்தில் பயங்கரவாதியோடு ஒன்று படுத்தி எப்படி பேசுவது. இதனை பார்வையாளர்களாக கண்ட எங்களின் மனங்கள் இன்னும் ஆறவில்லை. ஆகவே புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரையும் வண்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக புதிய தலைமுறை தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடமும் சிறுபான்மை மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதுவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியை முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் நடுநிலையான தொலைக்காட்சியாகத்தான் இருக்கும் என்று கருதியே அதிகமாக பார்த்துவந்தோம். அதோடு முஸ்லிம்கள் நடத்தக்கூடிய அதிகமான இணையதளங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இணையதள நேரடி ஒலிப்பரப்பிற்கான லிங்கை கொடுத்திருந்தனர். ஆனால் இன்றோ புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது பாசிச முகத்தை வெளியிட்டு சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களே இனியும் வெளுத்தெல்லாம் பால் என்று கருதாமல் விஷம் கக்கிய புதிய தலைமுறை தொலைக்காட்சியை புறக்கணிப்போம். தங்களது இணையதளங்களில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேரடி ஒலிப்பரப்பு லிங்குகளை உடனடியாக அகற்றுவோம். தங்களது கண்டனங்களை புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அனுப்பி பதிவுசெய்வோம்.
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக