புதன், ஜனவரி 30, 2013

விஸ்வரூபத்திற்கு சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல் - தமிழக அரசின் பரபரப்பு புகார் !

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் பெரும் ஊழல்,முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஸ்வரூபம் படத்திற்கு எதிரான தடை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பி்ல ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்கு முறையாக தணிக்கைச் சான்று வழங்கப்படவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. இதுமட்டுமல்ல, படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது, நடந்து கொண்டுள்ளது. அதுகுறித்தே தனியாக விசாரிக்க வேண்டும்.

 விஸ்வரூபம் படத்திற்குத் தணிக்கைச் சான்று அளித்த குழுவைச் சேர்ந்த யாருமே மத்திய அரசால் நியமிக்கப்ட்டவர்கள் அல்ல. அதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்தப் படத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழே முறைகேடானது. நான்கு பேர் மட்டுமே பார்த்து ஒரு சான்று அளிப்பதை ஏற்க முடியாது. அனைவரும் பார்க்க வேண்டும், குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து அனுமதி தர வேண்டும். எனவே இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார். 

144 தடை ஏன்...? அப்போது குறுக்கிட்ட நீதிபதி வெங்கட்ராமன், இந்தக் காரணத்திற்காகத்தான் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தீர்களா என்று கேட்டார். மேலும் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் இல்லையே என்றும் வினவினார். அதற்குப் பதிலளித்த நவநீதகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக