திங்கள், செப்டம்பர் 23, 2013

துனீஷியப் பெண்களைக் குறித்து இழிவாகப் பரப்பப்படும் செய்திக்கு மறுப்பு....

செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் துனீஷியப் பெண்களைக் குறித்து இழிவாகப் பரப்பப்படும் செய்திக்கு மறுப்பு வெளிவந்துள்ளது. சிரியாவில் 

நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிரியப் போராளிகளுக்கு  பாலியல் சுகம் அளிக்க துனீஷியாவிலிருந்து பெண்கள் செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் புறப்பட்டுச் செல்வதாக, தமிழ் ஊடகங்கள் உட்பட சில இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்களில்,   வதந்திகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியிடப்பட்டன. 

அப்பெண்கள் பல போராளிகளுடன் பாலியல் உறவு கொண்டு கர்ப்பமுற்றுத் திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அப்படி ஏதும் நிகழவில்லை என்றும், சிரிய தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

லுத்ஃபி பின் ஜாது எனும் துனிஷிய உள்துறை அமைச்சர் பெயரால் இச்செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் பரப்பி வருவதாகவும், அவை உண்மையல்லாதவை என்றும், அதே வேளை, சில போராளிகளின் குடும்பத்தினர் தம் குடும்பத்துடன் இணைவதற்காக சிரியா சென்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக