சனி, செப்டம்பர் 21, 2013

வெனிசுலா அதிபர் அமெரிக்க வான்வெளியில் பறக்கத் தடை!

மறைந்த ஹ்யூகோ சாவேஸ்ஸுக்குப் பின்னர் வெனிசுலா நாட்டின் அதிபராகப் பொறுப்பு வகிப்பவர் நிகோலஸ் மதுரா. வெனிசுலா நாட்டுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கிடையே காணப்படும் பகைமை காரணமாக வெனிசுலா அதிபரின் விமானம் பியூட்டாரிகோ வான்வெளியில் பறப்பதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வார இறுதியில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுராவின் விமானம் பியூட்டாரிகோ வான்வெளியில் பறக்கக் கூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதாக வெனிசுலா வெளியுறவுத்துறை அமைச்சர் எலியாஸ்  ஜாவுஸா தெரிவித்துள்ளார்.
ஒருநாட்டின் அதிபருக்கே இவ்வாறு தடை விதிப்பது முறையற்றது என்றும் எப்படியிருந்தபோதிலும் வெனிசுலா அதிபரின் சீனப்பயணத்தைத் தடுத்துவிட முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக