சனி, செப்டம்பர் 14, 2013

விண்வெளியில் கீரைகளை பயிரிட திட்டம்! நாசா அதிரடி

விண்வெளி வீரர்களின் உணவுக்காக கீரைகளை பயிரிட நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றன. இதில் பணிபுரிவதற்காக விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர், இந்த வீரர்களுக்கு விசேட உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு 450 கிராம்(ஒரு பவுண்டு எடை) உணவுக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. எனவே செலவை குறைப்பதற்காக பூமியில் இருந்து 380 கிலோமீற்றர் தூரத்தில் விண்வெளியில் பண்ணை அமைத்து கீரைகளை பயிரிட நாசா மையம் திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து காய்கறிகளை பயிரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இயந்திரங்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன. இத்திட்டம் வருகிற டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தின் திட்ட விஞ்ஞானி ஹோவார்ட் லெவின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக