திங்கள், செப்டம்பர் 23, 2013

திருச்சி: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை கொடுக்கும் காவல்துறை..

திருச்சியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக நரேந்திரமோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் எதிர்வரும் 26-09-2013 அன்று வரவிருப்பதையொட்டி, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜமால் முகம்மது, MIET ஆகிய சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்களை, மோடி வந்து சென்ற பிறகு வகுப்புக்கு வந்தால் போதும் என்று வாய்வழி உத்தரவை திருச்சி காவல்துறை விடுத்துள்ளதால் மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர். சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களைக் குறி வைத்து இத்தகைய உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் திரைப்பட நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 21ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் மட்டுமின்றி கேரள, கர்நாடக முதல்வர்களும், தமிழக ஆளுனர் மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்கின்றனர்.

மூன்று மாநில முதல்வர்கள், ஆளுநர், குடியரசு தலைவர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இல்லாத கெடுபிடிகளை, மோடி வருகையை முன்னிட்டு காட்டுவதன் மூலம் காவல்துறை காவிகளின் ஏவல் துறையோ என்று பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கம் திருச்சி பகுதியில் தான் உள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதை முதலமைச்சர் கவனித்து, பாஜகவினருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நம்பிக்கை இல்லையெனில் நிகழ்ச்சியை ரத்து செய்ய உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

முருகன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக