புதன், அக்டோபர் 31, 2012

ரஷ்யா: மர்ம நபர்கள் சுட்டு பள்ளிவாசல் இமாம் உள்பட 3 பேர் பலி !

மாஸ்கோ:ரஷ்யாவின் காகஸஸ் பகுதியில் உள்ள தாஜஸ்தானில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் பள்ளிவாசல் இமாமும்,  இரண்டு உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை தொழுகைக்கு செல்லும் வழியில் இமாம் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

பொய்ப் பிரச்சாரங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்த பாப்புலர் ஃப்ரண்டின் சமநீதி மாநாடு !


கோழிக்கோடு:நவீன சமூக இயக்க சக்தியின் வளர்ச்சியை    பொய்ப் பிரச்சாரங்களின்   மணல் கோட்டையை கட்டி தடுக்க முடியாது என்ற     பிரகடனத்துடன்    பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃ  ப் இந்தியாவின்   சமநீதி மாநாடு கோழிக்கோடு கடற்கரையில் புதிய வரலாற்றை எழுதியது.
பயம், கோழைத்தனம் இவற்றையெல்லாம் கடலில் தூக்கி வீசிவிட்டு தனது லட்சிய பயணத்தை துவக்கிய மாபெரும் இயக்கத்தை போலீஸ்-ஊடக-அரசு இயந்திரங்களின் மிரட்டல்களாலும், வேட்டையாடல்களாலும் தகர்க்க முடியாது என்ற பிரகடனத்திற்கு மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளம் சாட்சியம் வகித்தது.

வளர்ச்சி, சீர்திருத்தம், சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் மூவர்ண கொடியை ஏந்தியவாறு கேரளாவின் மலபார் பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தங்களது எதிர்ப்புணர்வை பறைசாற்றினர்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

14 வருடம் சிறையிலடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆமிருக்கு திருமணம்: அருந்ததி ராய் உட்பட பல மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்பு !


புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின் உறவினர்களும், நண்பர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

நிதின் கட்காரி ஊழல்: விசாரணை தொடங்கியது !

டெல்லி:பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் கட்டுப்பாட்டிலுள்ள பி.பி.எஸ்.எல். என்ற “பூர்த்தி பவர் அண்ட் சுகர் லிமிட்டட்”  (Purti Power & Sugar Limited – PPSL) என்ற நிறுவனத்திற்கெதிராக கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகமும், வருமான வரித்துறையும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காண்பதாகவும், இந்த நிறுவனத்தின் முதலீடுகள் குறித்து பரிசோதிக்கப்படும் என்றும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவன அறிக்கை கூறுகிறது. “பூர்த்தி பவர் அண்ட் சுகர் லிமிட்டட்” நிறுவனத்தின் பொருளாதார முதலீடுகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. பூர்த்தி குழுமத்தின் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள்

சனி, அக்டோபர் 20, 2012

இளைய ஆதீனம் பதவியில் இருந்து என்னை நீக்கியதில் எந்த மனவருத்தமும் இல்லை: நித்தியானந்தா !

மதுரை இளைய ஆதீனமாக இருந்த நித்தியானந்தா நேற்று அந்த பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் தனது ஆசிரமத்தில் நடந்த நவராத்திரி விழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  இந்த பதவியை நான் கேட்டு பெறவில்லை. மதுரை ஆதீனம், அவராகவே

மழை ஆலோசனைக் கூட்டத்திலுமா முதல்வருக்கு நன்றி சொல்வது! என்ன கொடுமையோ !

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது வழக்கமாக அமைச்சர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம்தான். ஆனால் இந்தக் கூட்டத்திலும் கூட முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட புகழாரங்கள், நன்றிகள் கூறி நெளிய வைத்திருக்கிறார் அமைச்சர் வெங்கடாசலம். அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூட்டிய இந்தக் கூட்டத்தில், வருவாய்துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நில நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் யத்தீந்திரநாத் ஸ்வேன், சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், நிலசீர்திருத்த இயக்குனர்

திருவனந்தபுரம்: அபுதாபி விமான காக்பிட்டுக்குள் நுழைந்த பயணிகள்: கடத்தல் முயற்சி தகவல் தந்த பைலட் !

திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கும் பைலட்டுகளுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. இதையடுத்து பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைய முயல, விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக விமானி தகவல் தர, விமான நிலைய பாதுகாப்புப் படையினர் விமானத்திற்குள் நுழைய பெரும் களேபரம் நடந்தது. இன்று

சிரியாவில் புரட்சி படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர் !

சிரியா:சிரியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக அசாத்திற்கு எதிராக புரட்சிப் படையினர் நடத்தி வரும் போரில் பல்லாயிரக்கணக்கானோர் செத்து மடிந்து வருகின்றனர். நடந்துவரும் உள்நாட்டுப் போருக்கு ஒரு தற்காலிக முடிவு கிடைக்குமென

மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: மத்திய ரிசர்வ் படை வாகனம் சிதறல் !

பீகார் : மாவோயிஸ்டுகளின் அரசுக்கு எதிரான சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. பீகாரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர். நாலவருக்கு படுகாயம் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பீகாரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கயா

வெள்ளி, அக்டோபர் 19, 2012

சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதா 'சமாதி' கட்ட முயற்சி: கருணாநிதி !


சென்னை: தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரமாண்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்கு 'சமாதி' கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முனைந்து நின்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். தேர்தல் அறிக்கையில் 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும், 'மணல் மேடுகள்' என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று 'ராமர் பாலம்' என்றும், அதனை பாரம்பரியம் மிக்க

காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல் தடுக்கி விழுந்த ஆஸி. பிரதமர் ஜூலியா !

டெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல்வெளியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரது ஹைஹீல்ஸ் செருப்புதான் இந்த தடுமாற்றத்துக்குக் காரணம். நல்லெண்ணப் பயணமாக டெல்லி வந்துள்ளார் கிலார்ட். நேற்று அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றார். அப்போது

4 நாள் யுத்த நிறுத்தம், நாம் தயார்? அவர்கள் தயாரா?

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கடந்த 17 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஒடுக்க அரசு படைகள் தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் அப்பாவி பொது மக்களும், போராட்டக்காரர்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்களும் அரசுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகின்றனர். சிரியாவில் அமைதியான சூழலை

‘நான் நலமாக உள்ளேன்!’ – ஃபிடல் காஸ்ட்ரோ

ஹவானா:கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் நிலை குறித்து மேலை நாட்டு ஊடகங்கள் மூலம் பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில், தான் நலமாக இருப்பதாக காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். 86 வயதான ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதி போப் பெனடிக்கின் வருகையின் போதும், ஏப்ரல் 5-ந் தேதி சிலி மாணவர் இயக்கத் தலைவர் கமில வாலிஜோவின் வருகையின் போதும் மட்டும் பொது

கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி !

டெல்லி:கூடங்குளம் அணு உலைக் கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறீர்கள்? அதனை எங்கு சேமித்து வைக்கப் போகிறீர்கள்? அவை பாதுகாப்பானதா? அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதா ஆகியவை குறித்து விளக்கமாக பதிலை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள மற்ற அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட

சனி, அக்டோபர் 13, 2012

பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார் !

லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது. லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு

வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது: ஹைகோர்ட் அதிரடி !

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை (வயது 73) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவருடைய மனைவி லீலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

வெள்ளி, அக்டோபர் 12, 2012

நியூயார்க்கில் பீர் பாட்டில் திருடிய கன்னியாஸ்திரி ! (வீடியோ இணைப்பு)


நியூயார்க்கில் உள்ள ஒரு கடையில் கன்னியாஸ்திரி ஒருவர் பொருட்கள் வாங்க வந்தார். அவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.  பின்னர் அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்த அவர் அதற்கு மட்டும் காசு கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் திருடியதை கடைக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை.  பின்னர் இருப்பை சரிபார்த்தபோது பீர் டின் ஒன்று

தமிழகத்து 8.75 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு அதிரடி உத்தரவு !

தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் முழுவதும் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி கண்காணிப்பு குழு கர்நாடக அரசுக்கு இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவினர் கடந்த 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளில் ஆய்வு செய்தது. இந்த ஆய்விற்கு பிறகு  டெல்லி சென்ற பின் இன்று நடைபெற்ற இந்த குழுவின் கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் மாதம் இறுதி வரை 8.75 டிஎம்சி

மக்கள் கொந்தளிப்பால் முறியடிக்கப்பட்ட மஸ்ஜித் தகர்ப்பு முயற்சி !

DDA wanted ‘parts’ of Munirka mosque to be demolishedபுதுடெல்லி:டெல்லி வளர்ச்சி ஆணையம் (Delhi Development Authority – DDA) தகர்க்க முனைந்த முனிர்கா மஸ்ஜிதின் ஒரு பகுதி அப்பகுதி மக்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது. டெல்லியில் முனிர்கா கிராமத்திலுள்ள நெல்சன் மண்டேலா சாலையில் இந்த மஸ்ஜித் உள்ளது. வசந்த் விகார் காவல் நிலையத்திற்கருகிலுள்ள இந்த மஸ்ஜிதின் ஒரு பகுதியைத் தகர்ப்பதற்காக நேற்று காலை 9 மணியளவில் புல்டோசர்களும், டிரக்குகளும்

இஸ்ரேல் கொலை செய்த ரேச்சல் கோரியின் பெற்றோருக்கு அமைதி விருது. . .

வாஷிங்டன்:காஸாவில் ஃபலஸ்தீனர்களின் வீடுகளை இடிக்க வந்த சியோனிச இஸ்ரேல் இராணுவ புல்டோசரைத் தடுக்கும்பொழுது படுகொலை செய்யப்பட்ட ரேச்சல் கோரியின் பெற்றோருக்கு அமைதி விருது வழங்கப்பட்டது. ரேச்சல் கோரியின் சார்பாக அவரின் பெற்றோர்கள் கிரெய்க் கோரியும், சிண்டி கோரியும் 2012 அமைதிக்கான லென்னன் ஓனோ கிராண்ட் (LennonOno Grant for Peace) விருதைப் பெற்றுக்கொண்டனர். ஐஸ்லாந்திலுள்ள

வியாழன், அக்டோபர் 11, 2012

சிரியா நாட்டின் பயணிகள் விமானம் துருக்கி போர் விமானங்களால் இடைமறித்து இறக்கம் !

சிரியா நாட்டின் பயணிகள் விமானம் துருக்கி போர் விமானங்களால் இடைமறித்து இறக்கம்சமீபத்தில் சிரியா ராணுவம் எல்லையில் நடத்திய மார்டர் குண்டு தாக்குதலில் துருக்கியில் 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிரியா மற்றும் துருக்கி இடையே பிரச்சினை வலுத்தது. துருக்கி எல்லைப் பகுதியில், சிரியா தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நேற்று துருக்கி அறிவித்தது. துருக்கி விமான நிலையத்தின் வழியாக எந்த ஆயுதத் தடவாளங்களும் செல்லக்கூடாது என்று அரசு முன்னரே

சாதிக் பாட்சா மரணம்.... சி.பி.ஐ. அறிக்கையில் சந்தேகக் கேள்விகள் !

2ஜி அலைக்கற்றை வழக்கின் முக்கியக் குற்ற வாளியான மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், அந்த வழக்கின் முக்கிய சாட்சியுமான சாதிக் பாட்சா, கடந்த ஆண்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்துபோனார். பல்வேறு புதிர்களையும் கேள்விகளையும் ஏற்படுத்திய அந்த மர்ம மரணம் பற்றிய அறிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதைப் பரிசீலித்த நீதிமன்றமும், சாதிக்

கேரளாவில் பதுங்கியிருக்கும் துரை தயாநிதி... தனிப்படை போலீஸார் விரைந்தனர் !

மதுரை: மதுரை கிரானைட் மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர். பல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர். பழனிச்சாமி கைது

புதன், அக்டோபர் 10, 2012

ரஷ்யாவில் ஆயுதக்கிடங்கு வெடிப்பு: மக்கள் அலறியடித்து ஓட்டம் !

ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் ஓரன்பர்க் நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது டோங்குஷ் ராணுவ வளாகம். இங்குள்ள ஆயுதக்கிடங்கு எதிர்பாராத விதமாக நேற்று வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதில் விமானக்குண்டுகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் என பயன்படுத்தபடாமல் இருந்த 4000 டன் பழைய வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறின.  தொடர் வெடிச் சத்தம் மற்றும்

கர்நாடக முதல்வரைப் பார்க்க மறுத்த பிரதமர்.. 2 நாளாக காத்திருந்து ஏமாந்தார் ஷெட்டர் !

டெல்லி: டெல்லி வந்திருந்த கர்நாடக முதல்வர்ஜெகதீஷ் ஷெட்டர் 2 நாட்களாக கடுமையாக முயற்சித்தும் அவரைப் பார்க்க மறுத்து விட்டாராம் பிரதமர் மன்மோகன் சிங். தனது உத்தரவையும் மதிக்காமல், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையும் மதிக்காமல் தன்னிச்சையாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தியதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ஷெட்டரைப்

அனுமதி இல்லாமல் ‘காலர் டியூன்’ – செல்போன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் !

புதுடெல்லி : வாடிக்கையாளரின் அனுமதியில்லாமல் காலர் டியூன் சேவையை ஆர்டிவேட் செய்த செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு  நுகர்வோர் நீதிமன்றம் கண்டனத்தையும், அபராதத்தையும் விதித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ராஜேந்திர யாதவ் என்பவர் வோடாபோன் நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு  தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்;   “வோடாபோன்  நிறுவனம்

செவ்வாய், அக்டோபர் 09, 2012

பாகிஸ்தானில் 20,000 இணையதளங்களுக்குத் அதிரடி தடை !

இஸ்லாமாபாத் : ஆட்சேபகரமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன என்று குற்றம் சாட்டி யூ டியூப்  உட்பட சுமார் 20,000 வரை இணையதளங்களும், வலையூட்டுகளும் பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. இஸ்லாத்திற்கு விரோதமான சினிமா இணையதளங்களில் வெளியிடப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு

தமிழகத்துக்கு காவிரி நீர் விடுவதை திடீரென நிறுத்தியது கர்நாடகம் !

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை மீறும் வகையில் மாக இன்று இரவு 8 மணி முதல் திடீரென தண்ணீர் திறப்பை நிறுத்திவிட்டது கர்நாடக அரசு. சம்பா பயிரைக் காக்கும் வகையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு 2 டிஎம்சி நீரை திறந்து விட உத்தரவிட

அமெரிக்கா: கோர்ட்டுக்கு வந்த அரசு வழக்கறிஞரின் பாக்கெட்டில் கஞ்சா !

கோர்ட்டுக்கு வந்த அரசு வக்கீலின் பாக்கெட்டில் இருந்து கஞ்சா சிகரெட் கீழே விழுந்தது. அதை பார்த்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து அழைத்து சென்றனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகர் அரசு வக்கீல் ஜேசன் கேன்ரல் (43). லூசியானாவில் 16 ஆண்டு வக்கீலாக பணியாற்றினார். 2009ம் ஆண்டில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் நகர அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணையின்

ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு !

ஜப்பானைச் சேர்ந்த, ஷின்யா யமனாகா, பிரிட்டனைச் சேர்ந்த, ஜான் குர்டான் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது.உலக அமைதிக்காகவும், மக்களுக்கும்,

வெனிசுலா தேர்தலில் அதிபர் ஹக்கோ சாவெஸ், மீண்டும் வெற்றி !

தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவில், நடந்த தேர்தலில், அதிபர் ஹக்கோ சாவெஸ், நான்காவது முறையாக, வெற்றி பெற்றுள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபராக, ஹக்கோ சாவெஸ், 1998ம் ஆண்டுமுதல், பதவி வகித்து வருகிறார். அதிபர் தேர்தல், நேற்றுமுன்தினம் நடந்தது. சோஷலிஸ்ட் கட்சி சார்பில், ஹக்கோ சாவெஸ் மீண்டும் போட்டியிட்டார். 14 ஆண்டுகளாக, ஆட்சியில்

நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது !

மாலத்தீவு முன்னாள் அதிபர், முகமது நஷீத், நேற்று கைது செய்யப்பட்டார். மாலத்தீவு ஜனநாயக கட்சியின் நிறுவனர் முகமது நஷீத். ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானவர். தன்னை கண்டித்து கேலி சித்திரம் வரைந்த நபரை, ஜாமினில் விடுவித்த நீதிபதியை கைது செய்ய இவர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சியினர், நாடு தழுவிய தொடர் போராட்டத்தில்

திங்கள், அக்டோபர் 08, 2012

இன்று கடல்வழி முற்றுகைப் போராட்டம்- மீண்டும் கூடங்குளத்தில் பதற்றம்

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை கடல்வழியே இன்று முற்றுகையிடப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டுகாலமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும்

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சருக்கும் சூடு, சொரணை இல்லை- வைகோ ஆவேசம் !

சென்னை: கர்நாடகத்தை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாது என்று ஆணவத்தோடு கன்னட வெறியராக மாறி, பிரதமருக்கு அமெரிக்காவில் இருந்து அவசர கடிதம் அனுப்பி உள்ளார். உடனடியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிப்படையாக பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றமான உணர்ச்சியோ, தமிழக நலனில் அக்கரையோ மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த ஒரு

சிரியா மீது படையெடுக்கும் துருக்கி! தாக்குதல் தீவிரம் !

அங்காரா: துருக்கி-சிரியா எல்லையில் சிரியாவுக்கெதிரான தாக்குதலை துருக்கி தீவிரப்படுத்தியுள்ளது. துருக்கியில் ஹதாய் பகுதியில் குவேக்டி என்று கிராமத்தில் சிரிய இராணுவம் ராக்கெட் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து துருக்கி பதிலுக்கு தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த புதன் கிழமை துருக்கியின் எல்லை கிராமத்தில் சிரிய இராணுவம் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் ஐந்து துருக்கி நாட்டவர்கள்

ஃபலஸ்தீன்: தடையை மீறி காஸ்ஸாவை நோக்கி ஸ்வீடன் உதவிக் கப்பல் !

ரோம்:இஸ்ரேலின் பொருளாதாரத் தடையில் சிக்கித் தவிக்கும் ஃபலஸ்தீன் காஸ்ஸா மக்களுக்கு பல நாடுகளின் உதவிப் பொருட்களுடன் ஸ்வீடனிலிருந்து ஓர் உதவிக் கப்பல் புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பல நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களும் வருகின்றனர். பயணத்தின் ஒரு கட்டமாக இத்தாலியின் துறைமுக நகரமான நேப்ளஸுக்கு எஸ்டில்லி என்ற ஸ்வீடன் கப்பல் நேற்று வந்தடைந்தது. “காஸ்ஸா மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தியவாசியப் பொருட்களை நாங்கள் கொண்டு வருகின்றோம். தட்பவெப்ப நிலை சாதமாக

5 வருடங்கள் கழித்து “லஷ்கர் தீவிரவாதிகள்” நிரபராதிகள் என்று விடுதலை !

புதுடெல்லி : 1857ம் ஆண்டு ஆங்கிலேயருக்கெதிராக நடந்த சிப்பாய்க் கலகத்தின் 150வது வருட நினைவு நாளின் பொழுது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஐந்து வருடங்கள் கழித்து அமர்வு நீதிமன்றம் நிரபராதிகள் என்று அறிவித்து விடுதலை செய்துள்ளது. 2007 ஏப்ரல் 27ம் தேதி லஷ்கரே தய்யிபா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜம்மு கஷ்மீரைச் சார்ந்த ஷஃப்காத் இக்பால் மிர், ஷாபிர் அஹ்மத், பாகிஸ்தானைச் சார்ந்த முஹம்மத் ஹசன் ஆகியோரை அமர்வு நீதிமன்றம் குற்றமற்றவர்கள்

“ஃபலஸ்தீனர்களிடம் நீதி காட்டுங்கள் : டாக்டர் பினாயக் சென் !

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோவளத்தில் நடைபெறும் சாகித்ய விழாவில் கலந்து கொண்ட பிரபல மனித உரிமைகள் ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்  “ஃபலஸ்தீனர்களிடம் நீதி காட்டுங்கள்!” என்று  தனது உரையில் கூறினார். அவ்விழாவில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். “ஏழைகள் மீண்டும் ஏழைகளாக ஆகிறார்களா?” என்ற தலைப்பில் ஐந்தாவது வருட கே.சி. ஜான் நினைவு நாளில் டாக்டர் பினாயக் சென்

சனி, அக்டோபர் 06, 2012

நான் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவேன் : இம்ரான்கான் !

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-  பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதியில் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை  கொன்று வருகிறது. அடுத்து நான்

ஏழுவருடத்திற்கு மின்வெட்டு நீடிக்கும்? - மின் கழகம் பகீர் அறிக்கை !

தமிழகத்தில் மின்வெட்டு பூதாகரமான பிரச்னையாக உள்ள நிலையில், இந்த மின் தட்டுப்பாடு இன்னும் ஏழுவருடம் நீடிக்கும் என்று பகீர் செய்தி வெளியாகியுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் மின்தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம் என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மின் உற்பத்தியில் சந்திக்கும் சவால்கள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது. அதில்" எரிபொருள், நீர், போக்குவரத்து மற்றும் சாலை, ரயில் வழித்தட

'அந்த' அன்னிய முதலீட்டுக்கு மட்டும் தான் எதிர்ப்பு.. 'இதுக்கு' இல்லை: கண்ணாமூச்சி ஆடும் பாஜக !

டெல்லி: நாட்டில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதுதான் பொதுவாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் பிரதான எதிர்க்கட்சியோ அன்னிய முதலீட்டு எதிர்ப்பிலும் "கூறு போட்டு வகை" பிரித்து வைத்திருப்பது அரசியலில் பெருங்கூத்துதான்! சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரத்தால் மன்மோகன்சிங், சிறுபான்மை அரசின் பிரதமராக

மாலேகான் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

புதுதில்லி : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான இராணுவத்தில் பணிபுரிந்த ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித், பிரக்யா சிங் தாக்கூர் உட்பட அனைத்து ஃபாசிஸ்டுகளுக்கும் இடைக்கால பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 4 வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்றும், அவர்களின் மனுவை இதுவரை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவா

வெள்ளி, அக்டோபர் 05, 2012

கருப்பு சட்டங்களை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த கருணாநிதி !

தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கின்ற  இழிவை எடுத்துக்காட்ட தாம் இன்று கருப்புச் சட்டை அணிந்ததாக திமுக தலைவர்  கருணாநிதி தெரிவித்தார்.  திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது"நாளைய தினம்தானே போராட்டம் அறிவித்திருந்தீர்கள்...இன்று ஏன்  கருப்பு  சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.  அதற்கு பதிலளித்த கருணாநிதி,"தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற 

அமெரிக்க அதிபர் தேர்தல்: நேரடி விவாதத்தில் ஒபாமாவை நொறுக்கித் தள்ளிய ரோம்னி !

அதிபர் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதத்தில், ஒபாமாவை விட, மிட் ரோம்னியின் வாதத்திறமை வாக்காளர்களை அதிகம் ஈர்த்துள்ளது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது 1960ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி ஆகியோர் புதன்கிழமை

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.127 உயர்வு.. இப்போது விலை 881.50 !

சென்னை: மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 127 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 14.2 கிலோ கொண்ட ஒரு சிலிண்டரின் விலை ரூ. 881.50 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் கொண்ட சமையஸ் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வருடத்துக்கு 6 ஆக குறைத்தது. இதனால் ஒரு வருடத்தில் நாம் வாங்கும் 14.2 கிலோ எடை கொண்ட முதல் 6 சிலிண்டர்கள்

"குடி" குடியைக் கெடுக்கும்! மதுவுக்கு தடைவருமா?

இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால்  மது விலக்கும், தீண்டாமையும் இன்னும் ஒழியவில்லை.  உடலுக்கு கேடு விளைவிக்கும் மது இன்றைய கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. புத்தாண்டு, பண்டிகை, திருவிழாக்கள்  என்று மது விற்பனை களைகட்டுகிறது.  தமிழ் சமூகத்தில், தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. மதுக்கடைகள் மூலம்

கூடங்குளம்: மம்தாவிடம் ஆதரவு கோரிய அணுஉலை எதிர்ப்பாளர்கள் !

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திவரும் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், தற்போது மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கோரியுள்ளனர். இதுதொடர்பாக போராட்டக்குழு தலைவர் உதயகுமார், மம்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாட்டின் சாதாரண

யுரேனியத்தை நிரப்பி விட்டதாக பொய் சொல்கிறார்கள்- உதயக்குமார் !

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் யுரேனியம் எரிபொருளை நிரப்பியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இது பொய்யான தகவல். உளவுத்துறையே திட்டமிட்டு இதைப் பரப்புவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று கூறியுள்ளார் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி முடிய 2 மாதங்கள் ஆகும் என்றும், மின் உற்பத்தி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும்

என்று தணியும் இந்த ஜாதிக் கொடுமைகள்? – ரூ.15 சம்பளத்திற்கு 42 ஆண்டுகளாக அரசுப் பணி செய்யும் தலித் பெண்கள் !

ரூ.15 சம்பளத்திற்கு 42 ஆண்டுகளாக அரசுப் பணி செய்யும் தலித் பெண்கள்உடுப்பி : பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் ஜாதிக் கொடுமைகள் இன்னும் தலைவிரித்தாடுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கர்நாடகாவிலுள்ள உடுப்பியில் அக்கு, லீலா ஆகிய இரண்டு தலித் பெண்கள் கடந்த 42 வருடங்களாக ரூ. 15 மாதச் சம்பளத்திற்கு அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சிப் பள்ளியில் துப்புரவுத் தொழிலாளிகளாகப் பணியாற்றி வருகின்றனர். ஆம்! மாதம் வெறும் 15 ரூபாய்க்கு… அதுவும் நீண்ட 42 வருடங்களாக… நம்பவே முடியவில்லையா? அரசு அதிகாரிகளின் அதிகார வெறி, ஜாதி வெறி அறிய மேலும்

ஆர்.எஸ்.எஸ் கொடுத்த நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறித் திளைத்தவர் நரேந்திர மோடி : திக்விஜய் சிங் !

டெல்லி: பொய்யைச் சொல்லுங்கள், அதை உரக்கச் சொல்லுங்கள், உறுதியாககச் சொல்லுங்கள், நூறு  முறை சொல்லுங்கள் என்பதுதான் நாஜிக்களின் தத்துவம்.  அதைத்தான் ஆர்எஸ்எஸ்ஸும் கடைப்பிடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கொடுத்த நாஜி பாரம்பரிய பயிற்சியில் ஊறித் திளைத்தவர்  நரேந்திர மோடி. அதனால்தான் கொடும் உள் நோக்கத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தியின் மருத்துவச் செலவுகள் குறித்து அவதூறாகக் கேள்வி கேட்கிறார் அவர் என்று  காங்கிரஸ் பொதுச்

வியாழன், அக்டோபர் 04, 2012

தொடர்ந்து 9-வது முறையாக நோபல் பரிசுக்கு சோனியா பெயர் சிபாரிசு !

மருத்துவம், விஞ்ஞானம், இலக்கியம், உலக சமாதானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலக சாதனை படைக்கிறவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் 2012-ம் ஆண்டுக்கான, உலக சமாதான நோபல் பரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை டெல்லியை தலைமையிடமாக கொண்டு

பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க மகளிருக்கான பிரத்யேக இரயில்கள்: இந்தோனேஷிய அரசு அதிரடி

நெரிசல் மிகுந்த ரயில் தடங்களில் மகளிருக்கான பிரத்யேக ரயில்களை இந்தோனேசிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொது ரயில்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக எழுந்த புகார்களால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலை நாட்களில் தலைநகர் ஜகார்த்தாவுக்கும் தெற்கேயுள்ள போகாருக்கும் இடையே 8 சிறப்பு ரயில்கள் விடப்படும். இளஞ்சிவப்பு நிற பேனர்கள் மற்றும் சின்னங்களுடன்