திங்கள், ஏப்ரல் 27, 2015

20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்கு தமிழர்கள் திரண்டு வரவேண்டும்: SDPI வேண்டுகோள்

ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஏப் – 28ல் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் நீதி பேரணிக்கு அணி, அணியாய் தமிழர்கள் திரண்டு வரவேண்டும் என SDPI கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

பீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில், பீகார், உத்தரபிரதேசத்தில் அதிக  பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் 45 பேர் நில அதிர்வு பாதிப்பால் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தை  தொடர்ந்து இந்தியாவில் டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

நேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை அனுப்புகிறது இங்கிலாந்து

நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவி செய்யும் பொறுட்டு தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய 8 அணிகளை இன்று இரவே அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. 

திங்கள், ஏப்ரல் 20, 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி போட்டியின்றி தேர்வு

விசாகப்பட்டினத்தில் நடந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 21-வது மாநாடு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது.

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து தேர்தல் கமிஷனராக இருந்த நசீம் ஜைதி புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

சனி, ஏப்ரல் 18, 2015

கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு !!!!

modi-visit
பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒருபகுதியாக 3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உடன் சென்றார்.

மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு நடத்துகின்றன.         

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, ஏப்ரல் 17, 2015

ஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; கிறிஸ்தவர்கள் போராட்டம்


ஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிரதாப்பூர் பகுதியில் செயின்ட் மேரி தேவாலயம் உள்ளது.

புதன், ஏப்ரல் 15, 2015

அமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

அமெரிக்காவில் பொதுமக்களின் கடவுள் நம்பிக்கையை தனது சுய லாபத்திற்காகப் பயன்படுத்தி, வங்கி மற்றும் வரி மோசடி உட்பட பல்வேறு நிதி மோசடிக் குற்றங்களில் ஈடுபட்ட, இந்திய சாமியாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

டென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்கு வாழ்த்துகள் குவிகிறது

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறிய இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் நகரில் நடந்த பேமிளி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில், பெண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி 6-0, 6-4 என்ற நேர் செட்டில் டெல்லாக்குவா (ஆஸ்திரேலியா)-தாரிஜா ஜூராக் (குரோஷியா) இணையை சாய்த்து மகுடம் சூடியது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி நடைபெறுகிறது.
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர்.

சனி, ஏப்ரல் 04, 2015

5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீசு

பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக் முகமது அன்சாரி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ந் தேதி எங்கள் அமைப்பின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. அன்று ஒற்றுமை ஊர்வலம் நடத்துவது வழக்கம். கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமநாதபுரத்தில் இதுபோன்ற ஒற்றுமை ஊர்வலம் நடத்த முறையாக போலீசில் அனுமதி பெறப்பட்டது.

திண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 9 பேர் பலி

திண்டுக்கல் அருகே கார்-டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியில், அதே பகுதியை சேர்ந்த பஜீருல்லாஹக் (வயது 32) என்பவர் போதகராகவும், பேராசிரியராகவும் இருந்து வந்தார். இவருடைய உறவினர்கள் கொடைக்கானலில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

எதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்களும் மதிப்போம்: ஈரான் அறிவிப்பு

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் நோக்கில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய P5+1 நாடுகள் கடந்த 8 நாட்களாக ஸ்விட்சர்லாந்தின் லாஸன் நகரில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதற்கான கெடுக்காலம் முடிவடைந்த பின்னரும் இந்த பேச்சுவார்த்தையில் இன்று ஓரளவுக்கு சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.

வியாழன், ஏப்ரல் 02, 2015

குஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத் தடுப்பு மசோதா நிறைவேற்றம்!


2003-ம் ஆண்டின் குஜராத் குற்றத் தடுப்பு மசோதா சர்ச்சைக்குரிய வகையில் திருத்தம் செய்யப்பட்டு குஜராத் பயங்கரவாத மற்றும் குற்றத் தடுப்பு மசோதாவாக நேற்று குஜராத் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்படுத்தும் மத்திய அரசு - அசாம்கான் சாடல்

பாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்படுத்தும் மனப்பான்மையை மத்திய அரசு கொண்டு உள்ளது என்று உத்தபிரதேசம் மாநில மந்திரி அசாம்கான் சாடிஉள்ளார்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

மத்திய மந்திரி சபையில் நிறுவனங்கள் துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.